அமீரக செய்திகள்

UAE: அபுதாபி மற்றும் அஜ்மான் இடையே புதிய பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம்..

அஜ்மான் மற்றும் அபுதாபி இடையே பயணிக்கும் நபர்களுக்காக பிரத்யேக புதிய பேருந்து சேவையானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுப் பேருந்து சேவையானது அஜ்மான் மற்றும் அபுதாபி இடையே நாளை (ஜூலை 9 ஆம் தேதி) தொடங்கி ஒவ்வொரு நாளும் மொத்தம் நான்கு பயணங்களை இயக்கும் என்று அஜ்மான் பொதுப் போக்குவரத்து ஆணையம் (ABTA) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது அஜ்மானில் இருந்து அபுதாபிக்கு நான்கு பேருந்துகளும், அபுதாபியில் இருந்து அஜ்மானுக்கு இரண்டு பேருந்துகளும் புறப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து அஜ்மானில் உள்ள அல் முசல்லா நிலையத்திலிருந்து அபுதாபி பேருந்து நிலையத்திற்கு இயக்கி பின் அல் முசல்லா நிலையத்திற்கு மீண்டும் ஒரு முழு வழி சுற்றாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி முதல் பேருந்து அஜ்மானிலிருந்து காலை 7 மணிக்கும் கடைசியாக இரவு 7 மணிக்கும் புறப்படும் என்றும் அபுதாபியில் இருந்து முதல் பயணம் காலை 10 மணிக்கும் கடைசி பயணம் இரவு 9.30 மணிக்கும் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டின் விலை 35 திர்ஹம் என்றும் பயணிகள் தங்கள் மசார் கார்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு சமூக ஊடக பதிவில், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அபுதாபி செல்வதற்கான பேருந்து சேவையை இயக்கவுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு மேலும் உதவ, அஜ்மானின் பஸ்-ஆன்-டிமாண்ட் (BOD) சேவை ஜூன் 4 அன்று நிறுத்தப்பட்ட பிறகு இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என தகவல் கூறப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த மினிபஸ்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து ஆணையத்தின் BOD சேவையானது பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேருந்திற்கான இருக்கைகள் ஒரு அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, சேவை கோரிக்கைகளின் அடிப்படையில் அதன் பயணம் உடனடியாக தீர்மானிக்கப்படுகிறது. இந்த செயலி மூலம் பயணிகள் தலா 7 திர்ஹம் செலுத்த வேண்டும்.

மற்ற அபுதாபி வழிகள்

அஜ்மான் மற்றும் அபுதாபி இடையே புதிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அபுதாபியில் வசிப்பவர்களுக்கு, அவர்களை ஷார்ஜா மற்றும் துபாய்க்கு இணைக்கும் இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. RTA வழித்தடங்கள் E100 மற்றும் E101 பேருந்து சேவையானது துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கிறது.

  • E100: அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் அபுதாபியின் மத்திய பேருந்து நிலையம் இடையே பேருந்து சேவையை இயக்கும்
  • E101: இப்னு பதூதா பேருந்து நிலையம் மற்றும் அபுதாபியின் மத்திய பேருந்து நிலையம் இடையே பேருந்து சேவையை இயக்கும்

துபாயைப் போன்று ஷார்ஜாவிற்கு SRTA வழித்தடம் 117R அபுதாபியை ஷார்ஜாவிற்குள் உள்ள பல நிறுத்தங்களுக்கு 30 திர்ஹம் கட்டணத்தில் இணைக்கிறது. ராஸ் அல் கைமாவில் வசிப்பவர்கள் காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்தில் 47 திர்ஹம்ஸ் கட்டணத்துடன் அபுதாபிக்கு செல்லலாம். மேலும் அபுதாபியிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இடையேயான பயணத்தைத் திட்டமிட, https://darbi.itc.gov.ae/ என்ற வலைதளத்தை பார்வையிடலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!