‘டமாக் ஹில்ஸ் 2’ பகுதிக்கு இன்று முதல் பேருந்து சேவை..!! விபரங்களை வெளியிட்ட RTA.. !!

ஜூலை 1ம் தேதியான இன்று முதல் துபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுப்புற பகுதியான டமாக் ஹில்ஸ் 2 பகுதிக்கு புதிய பேருந்து சேவையை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடங்கியுள்ளது. DA2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடமானது
துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கும், டமாக் ஹில்ஸ் 2 விற்கும் இடையே பேருந்து சேவையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
டமாக் ஹில்ஸ் 2 மற்றும் துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கு இடையே இயங்கும் இந்த பாதையானது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை புறப்படும் என்று பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிறுவப்பட்ட RTA சைன்போர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பயணம் காலை 5.47 மணிக்கும், கடைசியாக இரவு 9.32 மணிக்கும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளுக்கு ஒரு பயணத்திற்கு 5 திர்ஹம்ஸ் என்ற நி நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பொது போக்குவரத்து வசதியானது டமாக் ஹில்ஸ் 2 இல் வசிப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதிக்கு இயக்கப்படும் இலவச ஷட்டில் பஸ் பெரும்பாலும் நிரம்பியிருக்கும் என்றும், குறிப்பாக போக்குவரத்து நெரிசல் நேரங்களில், சிட்டிக்கு வண்டியில் செல்ல 90 முதல் 100 திர்ஹம்ஸ் வரை கட்டணம் செலுத்தி டாக்ஸியில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் RTA அறிவித்திருக்கும் இந்த புதிய பேருந்து வழித்தடமானது நிச்சயமாக ஒரு பெரிய உதவியாக இருக்கும். அதாவது 100 திர்ஹம்ஸ் செலுத்தி டாக்ஸியில் செல்வதற்கு 5 திர்ஹம்ஸ் செலுத்தி பேருந்தில் பயணிக்கலாம் என அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பயணமானது டமாக் ஹில்ஸ் 2-ல் இருந்து துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் என்றும், அங்கு அவர்கள் மெட்ரோவிற்கு செல்ல மற்றொரு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, டமாக் ஹில்ஸ் 2, டவுன்ஹவுஸில் வசிக்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு பிரபலமான விருப்பமாக மாறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், அப்பகுதியில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வில்லாவின் வருடாந்திர வாடகை 40,000 திர்ஹம்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel