வளைகுடா நாடுகளில் 9 மில்லியனாக பெருகிய இந்தியர்களின் எண்ணிக்கை..!! வேலை தேடி வரும் நாடுகளில் அமீரகம் முதலிடம்..

சமீப காலமாக இந்தியாவில் இருந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வளைகுடா நாடுகளில் கிடைக்கும் வேலை வாய்ப்பு, சிறந்த பொருளாதாரம், ஆடம்பர வாழ்க்கை முறை போன்றவை பல இந்தியர்களை வளைகுடா நாடுகளை நோக்கி ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒன்பது மில்லியனைத் தாண்டியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் அதிக தகுதி வாய்ந்த ஃபின்டெக், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் வங்கியியல் முதல் துப்புரவு பணியாளர்கள், வீட்டுதொழிலாளர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் பிளம்பர்கள் போன்ற வேலைகள் வரை பலதரப்பட்ட தொழில்களில் பணிபுரிகின்றனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அவற்றில், 3.55 மில்லியன் இந்தியர்களுடன், இந்தியாவில் இருந்து வரும் வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து சவூதி அரேபியா 2.64 மில்லியன் இந்தியர்களைக் கொண்டுள்ளது என்று சிங் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதே சமயம் குவைத்தில் ஒரு மில்லியன் இந்தியர்கள் உள்ளனர் என்றும், மற்ற வளைகுடா நாடுகளான கத்தார், ஓமான், பஹ்ரைன் போன்றவை கடைசி 3 இடங்களை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் இந்தியா தனது குடிமக்களில் 180,000 பேருக்கு இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை இந்திய விதிகளின் கீழ் இமிகிரேஷன் கிளியரன்ஸ் (immigration clearance) வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் 10 ஆம் வகுப்பிற்குக் குறைவான கல்வித் தகுதிகளைக் கொண்ட இந்தியர்களுக்கு குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய இந்திய அரசாங்கத்திடமிருந்து இமிகிரேஷன் கிளியரன்ஸ் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel