துபாய் மெட்ரோ பயணிகளுக்கு இன்றும் நாளையும் இலவச ஐஸ்கிரீம் வழங்கும் RTA..!! விபரங்களும் வெளியீடு..!!
இன்று துபாய் மெட்ரோவில் செல்லவிருக்கும் நபரா நீங்கள்..?? அப்படியென்றால் இன்று இலவச ஐஸ்கிரீமைத் தவறவிடாதீர்கள். ஆம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று ஜூலை 10 மற்றும் நாளை ஜூலை 11 ஆகிய இரண்டு நாட்களுக்கு துபாயின் இரண்டு மெட்ரோ நிலையங்களில் பயணிகளுக்கு இலவச ஐஸ்கிரீமை வழங்க உள்ளது.
இது குறித்து RTA தரப்பில் கூறப்பட்டுள்ள செய்தியில், கோடை வெப்பம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மெட்ரோ பயணிகளுக்கு இலவச ஐஸ்கிரீம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க தொழிலாளர்களுக்கு இலவச ஐஸ்கிரீம் வழங்கும் பிரச்சாரமும் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் RTA ஆல் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ள இலவச ஐஸ்கிரீம் பிரச்சாரத்தில் சாக்லேட், குக்கீகள் மற்றும் கிரீம், பட்டர்ஸ்காட்ச், காட்டன் சாக்லெட் மற்றும் வெண்ணிலா ஆகிய ஃப்ளேவர்களில் ஐஸ்கிரீம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விபரங்கள்:
Mashreq மற்றும் Ibn Battuta மெட்ரோ நிலையங்களில் இன்று ஜூலை 10ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வழங்கப்படும் என RTA தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று ஈக்விட்டி மற்றும் ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையங்களில் (ஜூலை 11) காலை 11 மணி முதல் இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel