சம்மரை முன்னிட்டு துபாய் ஏர்போர்ட் பார்க்கிங்கில் தள்ளுபடி அறிவிப்பு.. கட்டண விபரங்கள் என்ன..??
அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் குறுகிய காலத்திற்கு வணிக பயணம் அல்லது விடுமுறைக்கு செல்கிறீர்களா? அப்படியானால், துபாய் ஏர்போர்ட்ஸ் (DXB) புதிதாக அறிவிக்கப்பட்ட கோடைகால கார் பார்க்கிங் சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை, துபாய் ஏர்போர்ட்ஸ் டெர்மினல் 1 கார் பார்க் B, டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 3 முழுவதும் வாகன பார்க்கிங்கில் கோடைகால சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.
இதற்காக, துபாய் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ பார்க்கிங் தளமான www.mawgif.com மூலம் உங்கள் பார்க்கிங் இடத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம் நீங்கள் பார்க்கிங் செய்ய தேடும் நேரத்தையும் சேமிக்கலாம். இதற்கான கட்டணங்கள் மற்றும் எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, துபாய் விமான நிலையத்தில் உங்கள் காரை மூன்று நாட்களுக்கு நிறுத்துவதற்கு 300 முதல் 400 திர்ஹம்ஸ் வரை செலவாகும். இருப்பினும், வரவிருக்கும் கோடைகால ஆஃபருடன், நீங்கள் அதே காலக்கட்டத்தில் வெறும் 100 திர்ஹம்களுக்கு வாகனத்தை பார்க்கிங் செய்யலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தள்ளுபடி செய்யப்பட்ட பார்க்கிங் கட்டணங்கள்:
- 100 திர்ஹம்ஸ் – மூன்று நாட்கள்
- 200 திர்ஹம்ஸ் – ஏழு நாட்கள்
- 300 திர்ஹம்ஸ் – 14 நாட்கள்
உங்கள் பார்க்கிங் இடத்தை முன்கூட்டியே பதிவு செய்வது எப்படி?
1. mawgif.com/dxbbooking என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்
2. உங்கள் டெர்மினலை தேர்வு செய்யவும் – நீங்கள் பயணிக்கும் டெர்மினலை தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும் – உங்கள் வருகை மற்றும் புறப்படும் தேதிகள் மற்றும் நேரங்களை நிரப்பவும், பின்னர் ‘Get a Quote’ என்பதைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் பார்க்கிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் – கிடைக்கக்கூடிய பார்க்கிங் விருப்பங்களை மதிப்பாய்வு செய்து, ‘Book Now’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5. உங்கள் விவரங்களை வழங்கவும்:
- முழு பெயர்
- மின்னஞ்சல் முகவரி
- மொபைல் எண்
- வாகன தகவல்:
- நாடு
- எமிரேட் அல்லது இலக்கம் (digit) (உங்கள் காரின் ப்ளேட் நம்பரை பொறுத்து) பிளேட் நம்பர்
- கார் நிறுத்துமிடங்களில் உரிமத் தகடு அங்கீகாரம் அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதால், உங்கள் பிளேட் விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்யவும்.
6. மதிப்பாய்வு செய்து பணம் செலுத்துங்கள் – மொத்தச் செலவைச் சரிபார்த்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பணம் செலுத்தத் தொடரவும்.
7. உங்கள் முன்பதிவை முடிக்கவும் – கட்டணத்தை முடிக்க உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடவும். அதன் பின் மின்னஞ்சல் மூலம் முன்பதிவு உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel