துபாயில் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க நீங்களும் பரிந்துரைக்கலாம்..!! எப்படி தெரியுமா..??
அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் துபாயின் பொதுப் பேருந்துகளை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா..?? இருந்தபோதிலும் உங்கள் வழித்தடத்தில் குறைவான பேருந்து வசதி உள்ளதா..?? புதிய பேருந்து சேவை அல்லது நிறுத்தங்கள் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகில் இருக்க வேண்டுமா..?? அப்படியானால், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) அதனை பரிந்துரைப்பதன் மூலம் நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பை வடிவமைக்க நீங்களும் உதவலாம்.
அதாவது, RTA-வின் S’hail செயலி மூலம், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப புதிய பேருந்து மற்றும் கடல் சேவை வழித்தடங்களை வடிவமைக்க பரிந்துரைப்பதில் நீங்கள் பங்கேற்கலாம். இதன் மூலம் ஏற்கெனவே சில குடியிருப்பாளர்களால் முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் நீங்கள் வாக்களிக்கலாம் அல்லது புதிய வழித்தடங்களை நீங்களும் பரிந்துரைக்கலாம்.
இவ்வாறு குடியிருப்பாளர்கள் பங்கேற்பதன் மூலம் RTA-வானது புதிய பேருந்து நிறுத்தங்கள் அல்லது கடல்சார் நிலையங்களைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிட உதவும் என கூறப்படுகிறது. இறுதியாக அதனடிப்படையில் துபாயின் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க் மற்றும் சேவைகளை RTA விரிவுபடுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய RTA பொது போக்குவரத்து வழிகளை பரிந்துரைப்பது எப்படி?
1. S’hail அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யவும்: இது Apple மற்றும் Android சாதனங்களில் கிடைக்கும்
2. அப்ளிகேஷனை திறக்கவும்: உங்கள் திரையின் கீழே உள்ள ‘More’ என்பதை கிளிக் செய்யவும்.
3. ‘ஒரு வழியைப் பரிந்துரை’ என்பதற்குச் செல்லவும்: பின்னர், ‘suggest a route’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்: பேருந்து வழித்தடங்கள் அல்லது கடல் வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. வாக்களிக்கவும் அல்லது பரிந்துரைக்கவும்: ஏற்கனவே உள்ள முன்மொழியப்பட்ட வழிகளில் நீங்கள் வாக்களிக்கலாம் அல்லது புதியதை பரிந்துரைக்கலாம்.
6. புதிய வழியை உருவாக்கவும்: உங்கள் தொடக்க மற்றும் இறுதி இலக்குகளைக் குறிக்க வரைபடத்தில் சிவப்பு மற்றும் நீல அடையாளங்களை பயன்படுத்தவும்.
7. அதன் பின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும்: அதாவது, இந்த வழியை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்? இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பாதை புறப்படும்போதோ, வருகையின் போதோ அல்லது இரண்டிலுமே உங்கள் பயணத்தை மேம்படுத்துமா? நீங்கள் மாற்றுத்திறனாளியா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.
8. உங்கள் ஆலோசனையைச் சமர்ப்பிக்கவும்: RTA உடன் உங்கள் ஆலோசனையைப் பதிவுசெய்ய, ‘continue’ என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்கள் சமர்ப்பிப்பு S’hail பதியப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel