அமீரக வாகன ஓட்டிகள் தங்களின் ப்ளாக் பாய்ண்ட்ஸை குறைக்க அரிய வாய்ப்பு.. உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய முயற்சி.!!
அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள ‘விபத்து இல்லா நாள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட ப்ளாக் பாய்ண்ட்ஸ் குறைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் விபத்துகள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து உறுதிமொழியிலும் அவர்கள் கையெழுத்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முயற்சி ஆகஸ்ட் 26 முதல் இரண்டு வாரங்கள் வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளும் பெற்றோர்களும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். புதிய பள்ளி ஆண்டுடன் இணைந்து, மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து திரும்பி மீண்டும் பள்ளிக்கு திரும்புவதால், பள்ளியின் முதல் நாளை எந்த விபத்தும் இல்லாமல் உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
வாகன பாதுகாப்பு, பள்ளிகளுக்கு அருகில் வேக வரம்புகளை கடைபிடித்தல் மற்றும் மொபைல் போன்கள் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதன் மூலம் பொறுப்பான வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை வளர்ப்பதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து பாதைகளை பின்பற்றுவதையும், பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பதையும், பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும், அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற அனைத்து விதமான போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel