அமீரக குடியிருப்பாளர்கள் 6 மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு அமீரகம் திரும்ப ரிட்டர்ன் பெர்மிட் பெறுவது எப்படி..?? படிப்படியான விளக்கம் உள்ளே..!!
அமீரகத்தில் ரெசிடென்ஸ் விசாவில் தங்கியிருப்பவர்கள் உடல்நல சிகிச்சை, படிப்பு அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக 6 மாதங்களுக்கும் மேலாக அமீரகத்தை விட்டு வேறு நாடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இவ்வாறு தங்க நேர்ந்தால் உங்களின் ரெசிடென்ஸ் விசா தானாகவே ரத்து செய்யப்படலாம். இதனால் மீண்டும் அமீரகத்திற்குள் வர நீங்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், நீங்கள் அமீரகத்திற்கு திரும்பும் அனுமதிக்கு (return permit) விண்ணப்பிக்கவும் தகுதியுடையவராக இருக்கலாம்.
இந்த சிறப்பு அனுமதி, புதிய விசா தேவையில்லாமல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய உங்களை அனுமதிக்கிறது. இதற்கு தகுதியான பிரிவுகள் மற்றும் ரிட்டர்ன் பெர்மிட்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி கீழே காணலாம்.
ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டவர்களில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளியில் இருக்க தகுதியுடையவர்கள். அதாவது தங்களுடைய ரெசிடென்ஸ் விசாவை ரத்து செய்யாமல் நீண்ட காலத்திற்கு அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் பலனை கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் பெற்றுள்ளனர்.
எனினும் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்கக்கூடிய பிற வகை குடியிருப்பாளர்களும் உள்ளனர். அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் போர்ட்டலின் படி இந்த பிரிவினர் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவை– u.ae தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- எமிராட்டி குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள்
- வெளிநாட்டில் சிகிச்சைக்காக அமீரக நோயாளிகளுடன் பயணிக்கும் வீட்டு உதவியாளர்கள்.
- மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குடியிருப்பாளர்கள் (மருத்துவ அறிக்கையுடன்).
- வெளிநாட்டில் உள்ள அமீரக இராஜதந்திர ஊழியர்களின் வீட்டு உதவியாளர்கள்.
- பயிற்சி / பணிகளில் வெளிநாட்டிற்கு சென்ற பொதுத்துறை ஊழியர்கள் (மற்றும் குடும்பங்கள்).
- துபாய் (GDRFAD) விதிகளின்படி, வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள். பிற எமிரேட்டுகளுக்கு அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியுடன் (ICP) சரிபார்க்கவும்.
- செல்லுபடியாகும் ரெசிடென்ஸி
- விசாக்கள் கொண்ட முதலீட்டாளர்கள்.
- ஐக்கிய அரபு அமீரக தூதரக ஊழியர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள்.
- ICP ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிற பிரிவினர்.
உங்கள் ரெசிடென்ஸி நிலையைச் சரிபார்த்தல்
நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே நீண்ட காலம் தங்க திட்டமிட்டால், உங்கள் ரெசிடென்ஸி விசாவின் செல்லுபடியை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை:
- ICP ஸ்மார்ட் சர்வீஸ் போர்ட்டல் இணையதளத்தைப் பார்வையிடவும் – smartservices.icp.gov.ae, பின்னர் சேவை மெனுவில் அமைந்துள்ள ‘public services’ என்பதற்குச் செல்லவும். ‘File validity’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து, ‘search by file number’ அல்லது ‘passport information’ என்ற விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து ‘residency’ என வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் பாஸ்போர்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட் எண், காலாவதி தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும். நீங்கள் File Number-ஐ தேர்வுசெய்தால், பின்வரும் விவரங்களில் ஒன்றை உள்ளிடவும்:
- எமிரேட்ஸ் ஐடி எண்
- எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த எண் (UID எண்)
- கோப்பு எண் (file number).
- அடுத்து, உங்கள் பிறந்த தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும்.
- ‘I’m not a robot’ கேப்ட்சாவை டிக் செய்து, ‘search’ பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் விசாவின் பின்வரும் விவரங்களை கணினி உங்களுக்கு வழங்கும்:
- • File number
• UID number
• File status
• File issuance date
• File expiry date
ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருப்பவர்களுக்கான நுழைவு அனுமதி
உங்கள் விசாவிற்கான ஆறு மாத வரம்பை மீறியதால் உங்கள் விசா காலாவதியாகிவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால், மேலே பட்டியலிடப்பட்டுள்ள வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் நீங்கள் வந்தால், சிறப்பு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்து அமீரகத்திற்குள் மீண்டும் நுழைய முடியும்.
மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவைகள்:
அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்:
- வெளிநாட்டிலிருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- நாட்டிற்கு வெளியே தங்கிய 180 நாட்களுக்குப் பிறகு கோரிக்கையை விண்ணப்பிக்கவும்.
- 180 நாட்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பதை நியாயப்படுத்த சரியான காரணத்தை வழங்கவும்.
- நாட்டிற்கு வெளியே செலவழித்த ஒவ்வொரு 30 நாட்களுக்கும் அல்லது அதற்கும் குறைவாக 100 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை
நீங்கள் வசிக்கும் எமிரேட்டைப் பொறுத்து விண்ணப்ப செயல்முறை வேறுபடும்:
அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா: ICP ஸ்மார்ட் சர்வீஸ் போர்டல் – smartservices.icp.gov.ae மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ‘Residents outside the UAE’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Permits for staying outside UAE for over six months’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
துபாய்: GDRFAD இணையதளம் – www.gdrfad.gov.ae மூலம் விண்ணப்பிக்கவும், மேலும் ‘Return permit for resident outside UAE more than six months’க்கான விண்ணப்பத்தை நிரப்பவும். பின்னர், சரியான காரணத்தையும் ஆதார ஆவணங்களையும் வழங்கவும்.
இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் குடியிருப்பாளர்கள் ICPக்கு – 600522222 என்ற எண்ணிலும், GDRFADக்கு – 8005111 என்ற எண்ணிலும் அழைத்து தெரிந்து கொள்ளலாம். அதுவே நீங்கள் அமீரகத்திற்கு வெளியில் இருந்து அழைக்கிறீர்கள் என்றால், GDRFAD ஐ +971 4 313 9999 அவர்களின் என்ற சர்வதேச தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel