அமீரகத்தில் மொபைல் எண்ணை மாற்றாமல் டெலிகாம் நிறுவனத்தை மாற்றுவது எப்படி..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உங்களது தொலைபேசி எண்ணானது உங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் உங்கள் வங்கிக் கணக்கு போன்ற முக்கியமான ஆவணங்கள் மற்றும் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உங்களின் தற்பொதைய மொபைல் நெட்வொர்க்கை விட்டு வேறு மொபைல் நெட்வொர்க்கிற்கு மாற விரும்பினால் புதிய மொபைல் எண்ணை ஆவணங்களுடன் இணைக்க வேண்டும்.
ஆனால் அமீரக குடியிருப்பாளர்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்திலிருந்து வேறொரு டெலிகாம் நிறுவனத்திற்கு சேவையை மாற்றும்போது கூட உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் அதனையே தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
ஆம், நாட்டில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான போர்ட்டபிலிட்டி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த சேவை டெலிகாம் நிறுவனத்தை பொருட்படுத்தாமல் உங்கள் மொபைல் எண்ணை வைத்திருக்க அனுமதிக்கிறது. இந்த சேவையை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய செயல்முறைகளை இங்கே காணலாம்.
தேவையான ஆவணங்கள்
உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் நகலை வழங்க வேண்டும். நெட்வொர்க்குகளை தடையின்றி மாற்றுவதற்கு, உங்களின் சமீபத்திய சம்பளச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் போஸ்ட்பெய்டு திட்டத்தைப் பெறுவது குறித்து பரிசீலிக்கிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் மாதம் 2,500 திர்ஹம்ஸ் சம்பளம் பெற வேண்டும்.
du க்கு மாறுவது எப்படி..?
நீங்கள் எந்த du ஸ்டோருக்கும் சென்று அவர்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகளின் மூலம் இதனை செயல்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் இதனை சில படிகளின் மூலம் ஆன்லைனிலும் முடிக்கலாம். அதற்கு du இணையதளத்திற்குச் சென்று கீழ்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- du.ae க்குச் செல்லவும்
- ‘எண்ணை du ஆக மாற்று’ என்பதைக் கிளிக் செய்யவும்
- நீங்கள் du க்கு கொண்டு வர விரும்பும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- நீங்கள் விரும்பும் மொபைல் திட்டத்தைப் பொறுத்து ‘Postpaid’ அல்லது ‘Prepaid’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- Du இன் மாதாந்திர மொபைல் பவர் திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
- பின்னர் Du ஆக மாற்றப்பட்ட சிம் உங்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் உங்கள் சிம் கார்டை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்ய உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் முகவரி போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் சரியாகப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் கோரிக்கையின் நிலை குறித்து SMS மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 800 CHANGE (800 242643) என்ற எண்ணை அழைப்பதன் மூலம் உங்கள் கோரிக்கையின் நிலையை நீங்களும் சரிபார்க்கலாம்.
e& (எடிசலாட்) க்கு மாறுவது எப்படி..?
Du வைப் போலவே, நீங்கள் எந்த e& ஸ்டோருக்கும் சென்று அவர்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகளில் ஒருவரிடம் உங்களுக்கு உதவுமாறு கேட்கலாம் அல்லது அதன் இணையதளத்திற்கு சென்றும் நீங்கள் இந்த சேவையை பெறலாம். அதில் “ஃபோன் சேவையை e&க்கு எப்படி மாற்றுவது மற்றும் எனது தொலைபேசி எண்ணைத் தக்கவைப்பது” என டைப் செய்தால்
‘எப்படி மாறுவது’ என்ற பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
அதில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பவும். e& இன் வாடிக்கையாளர் பிரதிநிதிகளில் ஒருவர் உங்களுக்கு உதவ உங்களைத் தொடர்புகொள்வார்.
உங்கள் கோரிக்கை சீராக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் தற்போதைய சேவை வழங்குநரால் உங்கள் எண் இடைநிறுத்த வேண்டும்.
விர்ஜின் மொபைலுக்கு மாறுவது எப்படி..?
- விர்ஜின் மொபைல் இணையதளத்திற்குச் சென்று, “என் எண்ணை விர்ஜின் மொபைலுக்கு மாற்றவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தற்போதைய டெலிகாம் நிறுவனத்தை சார்ந்த உங்கள் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் விர்ஜின் மொபைல் கணக்கை உருவாக்கவும்.
- உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தவும்.
- நீங்கள் விர்ஜின் மொபைல் ஆப் இன் மூலமாகவும் இதனை செய்யலாம்.
இந்த சேவையை பெறுவதற்கு உங்களிடம் சரியான எமிரேட்ஸ் ஐடி இருப்பதை உறுதிப்படுத்தவும். பரிமாற்றம் செயலாக்கப்படும்போது விர்ஜினிடமிருந்து தற்காலிக தொலைபேசி எண்ணைப் பெறுவீர்கள். நீங்கள் எந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தீர்களோ, அதற்கு பணம் செலுத்தினால் மட்டுமே உங்கள் கோரிக்கை மாற்றப்படும்.
நீங்கள் e&ல் இருந்து மாறினால், உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த ஒரு வணிக நாள் ஆகும். இதற்கிடையில், நீங்கள் du இலிருந்து மாறினால், உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த இரண்டு வணிக நாட்கள் ஆகும்.
கட்டணம்
உங்கள் Pay As You Go (ப்ரீபெய்ட்) திட்டத்திற்கான நிலையான செயல்படுத்தல் கட்டணத்தை செலுத்துவதைத் தவிர, நீங்கள் du க்கு மாறும்போது கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை. அதேபோன்று e& மற்றும் Virgin Mobileக்கு மாறுவது இலவசம். இருப்பினும், போஸ்ட்பெய்டு திட்டத்தைப் பெறுவதை நீங்கள் கருத்தில் கொண்டால், நீங்கள் பெறும் திட்டத்தைப் பொறுத்து முன்பணத்தை செலுத்த வேண்டும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel