அமீரக செய்திகள்

துபாய்: அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து.. மெட்ரோ இயங்கும் நேரத்தை நீட்டித்துள்ள RTA..!!

உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமான துபாய் இன்டர்நேஷனல் (DXB), அடுத்த 13 நாட்களில் 3.43 மில்லியன் பயணிகளை கையாளும் என்று கூறியுள்ளது. பள்ளிகளின் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி அதிகளவு குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு திரும்பி வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துபாய் மெட்ரோவின் இயக்க நேரம் வார இறுதியில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 24 சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும், ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் செயல்படும் என்று RTA தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் அரை மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை நிர்வகிப்பதாக துபாய் ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 அன்று DXB 291,000 பயணிகளை கையாளும் வகையில் மிகவும் பரபரப்பான நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துபாய் 44.9 மில்லியன் விருந்தினர்களை வரவேற்றுள்ளது என்று DXB இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!