அமீரகத்தில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. செப்டம்பர் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நாளை தொடங்கவிருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் எரிபொருள் விலையானது சற்று உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் குழுவின் செப்டம்பர் மாத விலைப்பட்டியலின் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.90 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலையானது ஆகஸ்ட் மாதத்தில் 3.05 திர்ஹம்சாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது தற்போதைய அறிவிப்பின்படி, ஒரு லிட்டருக்கு 2.78 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஆகஸ்ட் மாதம் 2.93 திர்ஹம்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.71 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 2.86 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.95 திர்ஹம்சாக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல் ஆனது, செப்டம்பர் மாத விலை பட்டியலில் 2.78 திர்ஹம்சாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தையில் நிலவிய விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சற்று குறைக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் சற்று உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் அனைத்து வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel