அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

வேறொரு நாட்டில் வேலை செய்பவரை அமீரகத்தில் வசிக்க அனுமதிக்கும் ‘ரெசிடென்ஸ் விசா’ பற்றி தெரியுமா உங்களுக்கு..?? நன்மைகள், கட்டணம் என அனைத்தும் இங்கே..!!

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா.? அவ்வாறு பணிபுரிபவர்கள் ஐக்கிய அரபு அமீ்ரகத்தில் வசித்து கொண்டே தொலைதூரத்தில் வேலை செய்ய விரும்புகிறார்களா.? அவர்களுக்காகவே அமீரக அரசு ‘தொலைதூர வேலை ரெசிடென்ஸ் விசா (Remote Work Residence Visa)’ எனும் ஒரு வகையான விசாவை வழங்குகிறது.

அதாவது விசா பெறுவதற்கு, தனிநபர் அல்லது நிறுவனத்தின் ஸ்பான்சர் தேவையில்லாமல், ஒரு வருடம் வரை அமீரகத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் இந்த விசா வெளிநாட்டவர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த விசாவை பெறும் வெளிநாட்டவர் தனது குடும்பத்திற்கு விசா ஸ்பான்சர் செய்யவும், தேவைப்படும் பட்சத்தில் நாட்டில் தங்கும் காலத்தை புதுப்பிக்கவும் அனுமதிக்கிறது.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (ICP) படி, இந்த விசாவிற்கு தகுதி பெற, நீங்கள் அமீரகத்திற்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்தில் தொலைதூரத்தில் பணிபுரிவதுடன் (remote work) குறைந்தபட்சம் $3,500 அல்லது அதற்கு சமமான மதிப்பிலான தொகையை ஒரு மாதத்திற்கு சம்பாதிக்க வேண்டும்.

வெளிநாட்டு தொலைதூரப் பணியாளர்களைத் தவிர, தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவன முதலாளிகளும் இந்த விசாவைப் பயன்படுத்தலாம் எனவும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் கூறுகிறது. அது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது..?

‘தொலைதூர வேலை ரெசிடென்ஸ் விசா’ எனும் இந்த விசாவைப் பெற விரும்புபவர்கள் UAE பாஸைப் பயன்படுத்தி அல்லது அமர் மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பாஸ்போர்ட், புகைப்படம், வேலைவாய்ப்பு மற்றும் வருமானச் சான்று, உடல்நலக் காப்பீடு போன்ற ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை ICP இணையதளம், அதன் ஸ்மார்ட் சர்வீஸ் சிஸ்டம் அல்லது ஆப் மூலமும் சமர்ப்பிக்கலாம். விசா வழங்க விண்ணப்பதாரர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. விசா வழங்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர் 60 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய முடியும்.

கட்டணம் மற்றும் நிபந்தனைகள்:

ICPன் படி, 100 திர்ஹம் வழங்கல் கட்டணம், 100 திர்ஹம் விண்ணப்பக் கட்டணம், 100 திர்ஹம் ஸ்மார்ட் சேவைக் கட்டணம் மற்றும் 50 திர்ஹம் அதிகாரம் மற்றும் இ-சேவைக் கட்டணம் உட்பட இந்த விசாவிற்கான மொத்த கட்டணம் 350 திர்ஹம் ஆகும்.

ஒருவேளை விண்ணப்பம் முழுமையடையாமல் இருந்தால் அது திருப்பி அனுப்பப்படும். மேலும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் நிராகரிக்கப்படும். அதேபோன்று மூன்று முறை திரும்பினால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், விசா வழங்குவதற்கான கட்டணம் மட்டும் திருப்பித் தரப்படும். அதாவது ஆறு மாதங்களுக்குள் கிரெடிட் கார்டு மூலம் இந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்

  • வெள்ளை பின்னணியுடன் சமீபத்திய கலர் புகைப்படம்.
  • குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்.
  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததற்கான சான்று மற்றும் வேலை தொலைதூரத்தில் செய்யப்படுகிறது என்பதற்கான சான்று.
  • மாத வருமானம் $3,500 அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்களின் ஆதாரம்.
  • செல்லுபடியாகும் சுகாதார காப்பீடு.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!