அமீரக செய்திகள்

துபாயில் 3 நாட்களுக்கு நடக்கவுள்ள DSS இறுதிகட்ட விற்பனை.. 90% வரை தள்ளுபடி..

அமீரகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், கோடையை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனையொட்டி ‘DSS இறுதி விற்பனையில்’ 90 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெற, துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் குடியிருப்பாளர்களுக்கு ஒரு இறுதி வாய்ப்பை வழங்கவுள்ளது.

அதாவது துபாய் சம்மர் சர்ப்ரைசஸில் பங்கேற்கும் 2,500க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் 550க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் இந்த ப்ரொமோஷன்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை என மூன்று நாட்களுக்கு இந்த விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரமோஷனில் எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டுப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், நகைகள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உடைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று நாட்களுக்கு மட்டும், சொகுசு கார்கள், ரொக்கம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

பரிசுகள்

DSS ஷேர் மில்லியனர்: சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்திஃப் மற்றும் மால் ஆஃப் எமிரேட்ஸ் ஆகியவற்றில் ரேஃபிள் டிராவில் 1 மில்லியன் ஷேர் புள்ளிகள் அல்லது ஜாகுவார் எஃப் பேஸை வெல்லும் வாய்ப்பு.

துபாயின் ஃபெஸ்டிவல் சிட்டி மாலின் ‘spend and win’: 300 திர்ஹம்ஸ் செலவழிப்பதன் மூலம் லெக்ஸஸ் ஹைப்ரிட் SUVகள் மற்றும் தினசரி உடனடி பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம்

மெர்காடோ ஷாப்பிங் மால் அல்லது டவுன் சென்டர் ஜுமேராவில் 200 திர்ஹம் செலவிடுவதன் மூலம் வாராந்திர டிராவில் 5,000 திர்ஹம்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

வாஃபி சிட்டியில் 300 திர்ஹம்களை செலவிடுவதன் மூலம் 70,000 திர்ஹம் மதிப்புள்ள 22.2CT வைர நெக்லஸ் மற்றும் 18CT வெள்ளைத் தங்கத்தில் அமைக்கப்பட்ட காதணிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

அல் கவானீஜ் வாக், ப்ளூவாட்டர்ஸ், புர்ஜுமான், சிட்டி சென்டர் அல் ஷிந்தகா, சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மீஐசெம், சிட்டி சென்டர் மிர்டிஃப், சர்க்கிள் மால், சிட்டி வாக், டிராகன் மார்ட், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, இபின் பட்டுடா மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், மெர்கடோ, டவுன் சென்டர் ஜுமேரா, நக்கீல் மால், ஒயாசிஸ் சென்டர் மால், தி பீச் ஜேபிஆர், தி அவுட்லெட் வில்லேஜ், வாஃபி சிட்டி மற்றும் இது துபாயின் முன்னணி ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை இடங்கள் முழுவதும் நகரம் முழுவதும் இந்த DSS விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!