அமீரக சட்டங்கள்

UAE: பொது மன்னிப்பு பெற விரும்பும் நபர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வசதி.. எப்படி விண்ணப்பிப்பது..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1 முதல் பொது மன்னிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் பொது மன்னிப்பிற்கு விண்ணப்பித்து ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது டிராவல் பெர்மிட் எனும் பயண அனுமதி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமீரகத்தின், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளம் மற்றும் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பரிவர்த்தனைகளை இமிகிரேஷன் மையத்திற்குச் செல்லாமல் கையாள முடியும் என்றாலும், அதிகாரிகள் அறிவித்தால் (குறிப்பாக முழுமையற்ற பயோமெட்ரிக் பதிவுகளைக் கொண்டவர்களுக்கு) தனிப்பட்ட வருகை தேவைப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

அமீரக அரசு அறிவித்துள்ள இந்த பொது மன்னிப்பு திட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30, 2024 வரை இரண்டு மாதங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து தெரிவிக்கையில் ரெசிடென்ஸ் அனுமதி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, எந்த மையத்திற்கும் செல்லத் தேவையில்லாமல் மின்னணு மற்றும் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று ICP தெரிவித்துள்ளது.

இருப்பினும், அறிவிப்பைப் பெற்றால் மட்டுமே, குறிப்பாக கோப்பில் பயோமெட்ரிக் பதிவுகள் இல்லாதவர்களுக்கு, மையத்திற்குச் செல்வது அவசியமாக இருக்கலாம். அவ்வாறு செல்லும் போது, ​​பொது மன்னிப்பு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் எளிதாக ஸ்மார்ட் சேவைக்கு மாறுவதற்கு வசதியாக கோப்பை பூர்த்தி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொது மன்னிப்பு பெற்ற பின் பயணம் செய்ய விரும்பினால், அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டை தயார் செய்து, மின்னணு மற்றும் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் புறப்படும் அனுமதி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பதிவை முடிக்கவும், மின்னணு புறப்படும் அனுமதியைப் பெறுவதற்கு முன்பு கோப்பை இறுதி செய்யவும், மையங்களுக்குச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்படாவிட்டால், அவர்கள் உடனடியாக பயண அனுமதியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நடைமுறைகளின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற விரும்பும் நபர்களுக்கு 14 நாள் வெளியேறும் அனுமதி வழங்கப்படும். இருந்த போதிலுமே அக்டோபர் 30 வரை இருக்கும் பொது மன்னிப்புக் காலத்திற்குள் அனுமதி காலாவதியானாலும், அந்த நபர் வெளியேற அனுமதிக்கப்படுவார் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொது மன்னிப்பு காலத்திற்குப் பிறகு அனுமதி காலாவதியாகி, தனிநபர் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், அனுமதி தானாகவே ரத்துசெய்யப்படுவதோடு முந்தைய அபராதங்கள் மீண்டும் செலுத்தப்படும் மற்றும் பொருந்தக்கூடிய பயணத் தடைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!