ADVERTISEMENT

அபுதாபி: உணவுப் பாதுகாப்பு தரங்களை மீறியதால் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள்…

Published: 18 Sep 2024, 6:11 PM |
Updated: 18 Sep 2024, 6:11 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் சுகாதார விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்காத உணவகங்களை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் அபுதாபியில் உள்ள உணவு வர்த்தக நிறுவனம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்பட்டதால், அந்நிறுவனத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

முசாஃபா இண்டஸ்ட்ரியல் பகுதியில் உள்ள இதியாதி உணவுப் பொருள் வர்த்தக நிறுவனத்தில் (Itiyadi Foodstuff Trading company) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, அதன் நடைமுறைகள் பொது சுகாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதால் நிறுவனத்தை மூடியதாக அபுதாபி விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Adafsa) அறிவித்துள்ளது.

குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, எமிரேட் முழுவதும் உள்ள நிறுவனங்களில் வழக்கமான ஆய்வுகளை ஆணையம் மேற்கொள்கிறது. கடைகள் மட்டுமில்லாமல் உணவகங்கள் மற்றும் கஃபேக்களையும் அதிகாரிகள் பார்வையிடுகின்றனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel