அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE தொழிலாளர் சட்டம்: முதலாளி ஊழியர் இடையே தகராறு இருக்கும் போது சம்பளத்தை வழங்காமல் இருப்பது சரியா?? ஊழியரின் உரிமைகள் என்ன..??

அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் முழுநேர ஊழியராகப் பணிபுரியும் ஊழியருக்கு முதலாளியுடன் தகராறு இருக்கும்பட்சத்தில், முதலாளி ஊழியரின் சம்பளத்தை வழங்காமல் இருப்பது சரியா? நீதிமன்ற விசாரணையின் போது ஊழியரின் சம்பளத்தை வழங்க முதலாளி பொறுப்பா? முதலாளி மீது ஊழியர் வழக்குப் பதிவு செய்யலாமா? இதற்கான விளக்கங்களை கீழே காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் இத்தைகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, அவர்கள் அமீரக தொழிலாளர் சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றை தெரிந்து கொள்வது சிறந்தது.

அந்தவகையில், மேற்கூறிய சூழ்நிலைகளில் ஊழியர் என்ன செய்யலாம் மற்றும் ஊழியர்களுக்கான உரிமை என்ன என்பதை பற்றி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகையின்படி முதலாளி தனது ஊழியருக்கு உரிய தேதிகளில் வழங்க வேண்டும். இது ஃபெடரல் ஆணை சட்டம் எண் 22 இன் படி உள்ளது.

மேலும், ஒரு முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், புகாரைப் பெற்றவுடன், முதலில் MoHRE அந்த பிரச்சினையத் தீர்க்க முயற்சி செய்யலாம். ஆனால், MoHRE ஆல் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இணக்கமான தீர்வு ஏற்படவில்லை என்றால், வழக்கு தகுதிவாய்ந்த நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படலாம். இதனுடன் அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்கு மேலதிகமாக தகராறு, தரப்பினரின் வாதங்களை சுருக்கமாகக் கூறும் ஒரு குறிப்பேடு இணைக்கப்பட வேண்டும். இது ஃபெடரல் ஆணை சட்டம் எண் 1(4) இன் படி உள்ளது.

சில ‘வேலைவாய்ப்புச் சட்டத்தின்’ திருத்தத்தின் பிரிவு 1(5) இன் படி, தகராறு தீர்க்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஊழியரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் பட்சத்தில், ஊழியரின் சம்பளத்தை அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு அமைச்சகம் முதலாளிக்கு உத்தரவிடலாம்.

முடிவில், ஊழியருக்கும் முதலாளிக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில், முதலாளி தொடர்ந்து ஊழியரை பணியில் அமர்த்தினால், நடந்துகொண்டிருக்கும் வழக்குகளின் போது, சம்பளத்தைப் பெற ஊழியருக்கு உரிமை உண்டு.

கூடுதலாக, தகராறு தீர்க்கப்படாமல் ஊழியர் தொடர்ந்து பணிபுரிந்தால், இரண்டு மாத ஊதியத்தை கோரவும் உரிமை உண்டு என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!