செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும் புதிய வேகவரம்பு: துபாயின் இரண்டு முக்கிய சாலைகளில் வேகவரம்பை அதிகரித்த RTA!!
துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இரண்டு முக்கிய சாலைகளில் புதிய வேக வரம்பை அறிவித்துள்ளது. இது தொடர்பாக RTA நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், துபாயின் முக்கிய சாலைகளான அல் அமர்தி ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் ஸ்ட்ரீட்டின் சில பகுதிகளில் அதிகபட்ச வேக வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு சாலைகளிலும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுள்ளதகவும் RTA குறிப்பிட்டுள்ளது.
புதிய வேக வரம்புகள்
- ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டில் அதிகபட்ச வேக வரம்பு துபாய் அல் அய்ன் சாலை மற்றும் அகாடமிக் சிட்டி ரவுண்டானா இடையே மணிக்கு 100 கிமீ வேகத்திற்கு உயர்த்தப்படும்.
- அகாடமிக் சிட்டி ரவுண்டானாவிற்கும் அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டிற்கும் இடையே அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 90 கி.மீ ஆக அதிகரிக்கப்படும்.
- அல் கவானிஜ் ஸ்ட்ரீட் மற்றும் எமிரேட்ஸ் சாலைக்கு இடையே உள்ள அல் அமர்தி ஸ்ட்ரீட்டில் மணிக்கு 90 கிமீ வேக வரம்பு நிர்ணயிக்கப்படும்.
அல் அமர்தி ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளின் வேக வரம்புகள் துபாய் காவல்துறை தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் சரிசெய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.
வெகுவிரைவில், இந்தப் பகுதிகளில் போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சாலை அடையாளங்கள் புதிய அதிகபட்ச வேக வரம்புடன் மாற்றப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு சாலைகளும் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன, இது பாதைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் சந்திப்புகளில் மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது.
குறிப்பாக, ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் தெரு துபாய் அல் அய்ன் சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேம்பாடு உட்பட பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உட்பட்டுள்ளது. தற்போது, ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இதில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் 2030 ஆம் ஆண்டளவில் நிறைவடையும், இது ஸ்ட்ரீட் முழுவதும் 100 கிமீ / மணி அதிகபட்ச வேக வரம்பைப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது.
கூடுதலாக, அல் அமர்தி ஸ்ட்ரீட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, சேவை சாலைகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் அல் கவானிஜ் ஸ்ட்ரீட்டுடன் கூடிய ரவுண்டானா சிக்னல் கட்டுப்பாட்டு சந்திப்பாக மாற்றப்பட்டு, போக்குவரத்து ஓட்டம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel