UAE: வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் தலைமறைவு அறிக்கையை வாபஸ் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள், செயல்முறை மற்றும் கட்டணம் போன்ற விபரங்கள் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது பொதுவான நடைமுறையாகி வருகின்ற நிலையில், அவர்கள் முதலாளிகளிடம் முறையாக தெரிவிக்காமல் ஓடிப்போகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே, இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) காவல்துறை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான எளிய செயல்முறையை அமைத்துள்ளது.
மேலும், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் திரும்பி வந்த நிகழ்வுகளும் இருக்கலாம் அல்லது திரும்பி வராததற்கு சரியான காரணமும் இருக்கலாம். சில சமயம், முதலாளிகள் தவறான முறையில் புகாரைப் பதிவுசெய்து, வீட்டுத் தொழிலாளரை சமரசம் செய்யும் சூழ்நிலைக்கு உள்ளாக்கிய நிகழ்வுகளும் இருக்கலாம். இப்படியான சூழல்களில், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் MoHRE மூலம் தங்கள் தரப்பிலிருந்து புகாரை வாபஸ் பெற முடியும்.
வீட்டுப் பணியாளர் தகராறுகள் தொடர்பான சட்டங்களில் அமீரகத்தின் சமீபத்திய திருத்தங்களின் படி, தொழிலாளர் தகராறுகள், அனைத்து ஊழியர் தகராறுகளும் கடைசி முயற்சியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக முதல் வழக்கு நீதிமன்றத்தில் (Court of First Instance) எடுத்துக்கொள்ளப்படும். இத்தகைய தகராறுகளில் இருதரப்பிலும் MoHRE உடன் இணக்கமான தீர்வு எட்டப்படாவிட்டால் மட்டுமே வழக்கு நீதிமன்றத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் தலைமறைவு அறிக்கையை திரும்பப் பெறுவது எப்படி என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
வீட்டு தொழிலாளர்கள்
வீட்டு தொழிலாளர்கள் MoHRE இன் இணையதளம், ஸ்மார்ட் ஆப் அல்லது வீட்டுப் பணியாளர் மையங்கள் அல்லது தவ்சீல் வாகனங்களைப் (Tawseel vehicle) பார்வையிடுவதன் மூலம் இந்த செயல்முறையைத் தொடங்கலாம்.
துபாய் தவிர அனைத்து எமிரேட்களிலும் இந்த சேவை MoHRE மூலம் கிடைக்கிறது. துபாயில் இருப்பவர்கள் துபாய் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) மூலம், தலைமறைவு அறிக்கையை மேல்முறையீடு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்
- வீட்டுப் பணியாளரின் எமிரேட்ஸ் ஐடியின் நகல்
- வீட்டுப் பணியாளரின் பாஸ்போர்ட்டின் நகல்
நிபந்தனைகள்
வீட்டுப் பணியாளர் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்க வேண்டும் மற்றும் அதனை செல்லுபடியானாலும் அல்லது இல்லாவிட்டாலும் வழங்க வேண்டும்.
வீட்டுப் பணியாளருக்கு எதிராக முதலாளி தாக்கல் செய்யும் தலைமறைவு அறிக்கைக்கான பதிவு இருக்க வேண்டும்.
செயல்முறை
இணையதளம் அல்லது பிற தளங்கள் மூலம் தலைமறைவு அறிக்கை வாபஸ் பெறுவதற்கு வீட்டுப் பணியாளர்கள் தங்கள் அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்.
- முதலில் தேவையான கட்டணத்தை செலுத்தி தொடர வேண்டும்.
- வீட்டுப் பணியாளரின் விண்ணப்பம் மின்னணு முறையில் சரிபார்ப்பதற்காக அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
- புகாரின் செல்லுபடியை சரிபார்க்க, சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு செய்யப்படும்.
- விண்ணப்பத்தில் ஏதேனும் நிராகரிப்புகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், வீட்டுப் பணியாளர் அதைத் தெரிவிக்கும் குறுஞ்செய்தியைப் பெறுவார். பின்னர் அவர் வீட்டுப் பணியாளர்கள் சேவை மையங்கள் அல்லது தவ்சீல் வாகனங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
- வீட்டுப் பணியாளருக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புதல் கிடைத்துவிட்டால், தலைமறைவு அறிக்கையை ரத்து செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். தலைமறைவு ரத்து செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் முதலாளியைக் குறிப்பிடாமல் புகாரை ரத்து செய்ய தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- அதுமட்டுமில்லாமல், தலைமறைவு அறிக்கை ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, வீட்டுப் பணியாளரின் அனுமதிப்பத்திரம் முதலாளியின் கோப்பில் இருந்து ரத்து செய்யப்படாவிட்டால், தலைமறைவு அறிக்கையை பதிவு செய்ய SMS மூலம் முதலாளிக்கு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவைப் பெற மூன்று நாட்கள் வரை ஆகும். இதற்கிடையில், தொழிலாளர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை இணையதளத்தில் கண்காணிக்கலாம்.
கட்டணம்
- இணையதளம் மற்றும் ஆப் மூலம் விதிக்கப்படும் கட்டணம் 115 திர்ஹம்.
- வணிக மையங்களில் அதிகபட்சமாக 72 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகின்றன.
முதலாளிகள்
MoHRE இன் இணையதளம், ஆப் அல்லது Tasheel அல்லது Tadbeer மையங்கள் அல்லது Tawseel வாகனங்களைப் பார்வையிடுவதன் மூலம் முதலாளிகள் செயல்முறையைத் தொடங்கலாம். இந்த சேவை துபாய் தவிர அனைத்து எமிரேட்களிலும் MoHRE மூலம் முதலாளிகளுக்கு கிடைக்கிறது.
துபாயில் வசிப்பவர்கள் அருகிலுள்ள அமர் மையத்திற்குச் செல்லலாம் அல்லது துபாய் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
- வீட்டுப் பணியாளரின் எமிரேட்ஸ் ஐடியின் நகல்
- வீட்டுப் பணியாளரின் பாஸ்போர்ட்டின் நகல்
நிபந்தனைகள்
வேலை செய்யாத வீட்டுப் பணியாளருக்கு எதிராக முதலாளி புகார் செய்ததைப் பற்றிய அறிக்கை கணினியில் இருக்க வேண்டும்.
செயல்முறை
- முதலாளிகள் MoHRE இன் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும் அல்லது அவர்களின் UAE PASS-ஐ பயன்படுத்த வேண்டும்.
- கட்டணம் செலுத்துவதன் மூலம் முதலாளிகள் தொடரலாம்.
- விண்ணப்பம் சரிபார்ப்புக்காக அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
- ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.
- புகாரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த முதலாளி தொடர்பு கொள்ளப்படுவார்.
- ஒப்புதலுக்குப் பிறகு, விண்ணப்பமானது இறுதி ஒப்புதலுக்காக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.
- அது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டதும், வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
செயல்முறை முடிவதற்கு மூன்று வேலை நாட்கள் வரை ஆகும்.
கட்டணம்
- இணையதளம் மற்றும் ஆப் மூலம் விதிக்கப்படும் கட்டணம் 115 திர்ஹம்.
- வணிக மையங்களில் அதிகபட்சமாக 72 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel