அமீரக செய்திகள்

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு துணைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இமிக்ரேஷன் விவகாரங்கள் தொடர்பாக, பிரவாசி பாரதீய சஹாயதா கேந்திராவிலிருந்து (Pravasi Bharatiya Sahayata Kendra) பேசுவதாகக் கூறி மோசடியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிநாட்டவர்களை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள X தள பதிவில், துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள வெளிநாட்டவர்கள், பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திரா தொலைபேசி எண்: 80046342 ஐ பிரதிபலிக்கும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பல இந்திய மொழிகளில் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல், இல்லாத சில இமிகிரேஷன் விவகாரங்களைத் தீர்ப்பதாகக் கூறி, பணம் பறிக்க முயற்சிக்கும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, இமிக்ரேஷன் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் தூதரகம் இந்திய வெளிநாட்டவர்களை அழைப்பதில்லை. தயவு செய்து அத்தகைய அழைப்பாளர்களுடன் உரையாட வேண்டாம் என்றும் தூதரகம் அந்த பதிவில் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, துணைத் தூதரகம் தனிப்பட்ட தகவல், OTP, பின் எண்கள் அல்லது வங்கி விவரங்களைக் கேட்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில், அமீரகத்தின் ஃபெடரல் டேக்ஸ் அத்தாரிட்டி சைபர் குற்றவாளிகளால் செய்யப்படும் மின்னஞ்சல் ஃபிஷிங் மோசடிகள் குறித்து  எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!