UAE: டாக்ஸியில் கிடந்த 1 மில்லியன் திர்ஹம்.. பத்திரமாக ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்!! கெளரவித்த துபாய் போலீஸ்…
துபாயில் எகிப்து நாட்டைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தனது டாக்ஸியில் கிடந்த 1 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான பொருட்களை பாதுகாப்பாக காவல்துறையிடம் திருப்பி ஒப்படைத்ததாகவும், அவரது நேர்மையைப் பாராட்டி, சான்றிதழ் வழங்கி அவரை கெளரவித்ததாகவும் துபாய் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அல் பர்ஷா காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் மஜித் அல் சுவைதி அவர்கள், துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனில் பணிபுரியும் ஹமாதா அபு ஜெயித் (Hamada Abu Zeid) என்ற ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, சமூகம் முழுவதும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் நேர்மறையான மதிப்புகளை வலுப்படுத்துவதிலும் சமூக ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கியுள்ளார்.
மேலும், துபாய் காவல்துறை அந்த டிரைவரின் செயலை பாராட்டியதுடன், “அவரது செயல் துபாய் காவல்துறை சமூகத்தில் ஊக்குவிக்க விரும்பும் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பின் உன்னத மதிப்புகளை உள்ளடக்கியது” என்று கூறியுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஓட்டுநர் அபு ஜெய்த் துபாய் காவல்துறை வழங்கிய அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், மதிப்புமிக்க பொருட்களை சரியான உரிமையாளரிடம் பாதுகாப்பாக திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய காவல்துறைக்கு திருப்பித் தருவது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇதுபோல UAE குடியிருப்பாளர்களின் நற்செயல்களுக்காக அவர்களை காவல்துறை அங்கீகரித்த பிற நிகழ்வுகளும் உள்ளன. கடந்த மாதம், இரண்டு குடியிருப்பாளர்கள் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நெறிமுறை நடத்தைக்காக துபாய் காவல்துறையால் கௌரவிக்கப்பட்டனர். பர் துபாய் காவல் நிலையம் யாசிர் ஹயாத் கான் ஷீர் மற்றும் நிஷான் ராய் பிஜாப் குமார் ரே ஆகியோரின் முயற்சிகள் சமூகத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பங்களித்ததற்காக அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தது.
ஜூன் மாதத்தில், ஒரு சிறுவன் தொகையுடன் இருந்த பணப்பை ஒன்றை பத்திரமாக ஒப்படைத்ததற்காக துபாய் காவல்துறையினரால் கௌரவிக்கப்பட்டார். அஹ்மத் என்ற சிறுவன், அல் முஹைஸ்னா 4 பகுதியில் பணப்பையைக் கண்டதும் அதனை அல் குசைஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காக, காவல் துறையினர் அவருக்கு சான்றிதழ் மற்றும் சிறப்புப் பாராட்டுச் சின்னம் வழங்கி, பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் அவரைக் கௌரவிக்கும் விழாவுக்கும் ஏற்பாடு செய்தனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel