ADVERTISEMENT

துபாயின் அதிரடி: 10 ஆண்டுகள் ரெசிடென்ஸி விதிமீறல்கள் புரியாத வெளிநாட்டவர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு சிறப்பு சலுகைகள்.. GDRFA அறிவிப்பு…

Published: 23 Oct 2024, 6:35 PM |
Updated: 23 Oct 2024, 6:42 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), கடந்த 10 ஆண்டுகளில் குடியுரிமை மீறல்கள் (residency violation) இல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் எமிராட்டி ஸ்பான்சர்களுக்கு நவம்பர் 1 முதல் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் குடியுரிமைச் சட்டங்களைக் (residency laws) கடைப்பிடிக்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக ‘Ideal Face’ என்ற இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், குடியுரிமை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் துபாயின் ‘ஐடியல் ஃபேஸ்’ ஆக திகழ்வார்கள் என்றும் GDRFA விளக்கமளித்துள்ளது.

GDRFA வழங்கும் சிறப்பு சலுகைகள்:

  • அமர் அழைப்பு மையத்தை (Amer call center) தொடர்பு கொள்ளும்போது முன்னுரிமை அழைப்பு சேவை
  • அமர் மையங்களில் தங்கள் நேரத்தை விரைவுபடுத்த அர்ப்பணிக்கப்பட்ட சேவை வரிசை
  • ‘ஐடியல் ஃபேஸ்’ டிஜிட்டல் பாராட்டுச் சான்றிதழைப் பெறுதல்
  • மொபைல் சேவை வாகனம் மூலம் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லங்களில் சேவைகளை வழங்குதல்

இருப்பினும், மேற்கூறிய சலுகைகள் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பதை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. சிறப்பு சலுகைகளுக்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • ஐக்கிய அரபு அமீரகக் குடிமகனாக அல்லது வெளிநாட்டு குடியிருப்பாளராக இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 10 வருடங்கள் துபாயில் வசித்திருக்க வேண்டும்
  • கடந்த 10 ஆண்டுகளில் குடியுரிமை மீறல்கள் எதுவும் செய்யாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஸ்பான்சராக இருக்க வேண்டும்
  • ஸ்பான்சருக்கு நடப்பு ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குடியுரிமை மீறல்கள் இருக்கக்கூடாது

இந்த முயற்சி அமீரகத்தின் குடியுரிமைச் சட்டங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாக உறுதியளிப்பதன் மூலம் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் வழங்குகிறது என்று GDRFA அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது குறித்து GDRFAயின் இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி பேசுகையில், ‘ஐடியல் ஃபேஸ்’ முன்முயற்சி சட்டங்களுக்கு இணங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரகாசமான கௌரவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை முன்னிலைப்படுத்துவதாகவும், இது அனைவரையும் நேர்மறையான நடத்தையை பின்பற்ற ஊக்குவிப்பதுடன், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை அடைவதற்கு பங்களிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

எனவே, எமிரேட்டில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் நாட்டின் குடியுரிமைச் சட்டங்களுக்கு தங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை உறுதியளித்து இந்த முயற்சியில் பங்கேற்குமாறு GDRFA அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel