UAE: குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை பெற வேண்டுமா..?? EHS ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு வழிகாட்டி இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் நியாயமான செலவில் தரமான மருத்துவ சேவையை பெற விரும்பினால், அரசாங்கத்தின் மருத்துவ மையங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது அமீரகம் முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களை நிர்வகிக்கும் எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS), பொதுவாக மற்ற மருத்துவ மையங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் 20 சதவீத சேவைக் கட்டணங்கள் இல்லாமல் குடியிருப்பாளர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குகிறது. இந்த மருத்துவ சேவைக்கான ஹெல்த் கார்டை எப்படி பெறுவது? அதற்குண்டான செலவு உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
EHS ஹெல்த் கார்டு
சுமார் 13 மருத்துவமனைகள் மற்றும் 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்கள் EHSஆல் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, அமீரகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்பாளரும் EHS-ஆல் இயக்கப்படும் மருத்துவமனை அல்லது கிளினிக் அல்லது டைப்பிங் சென்டரில் கூட EHS ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக பதிவு செய்தவுடன், ஹெல்த் கார்டானது குடியிருப்பாளரின் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்படும். அமீரகத்தில் இந்த கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்களின் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி அவசியம். ஒருவேளை, நீங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:
- பிறப்புச் சான்றிதழ்
- இரு பெற்றோரின் பாஸ்போர்ட்
- இரு பெற்றோரின் எமிரேட்ஸ் ஐடிகள் (தேவைப்பட்டால்)
- இரு பெற்றோரின் ரெசிடென்ஸ் அனுமதிகள் (தேவைப்பட்டால்)
செல்லுபடியாகும் காலம்
- UAE மற்றும் GCC நாட்டினர்: ஐந்து ஆண்டுகள்
- வெளிநாட்டவர்கள்: ஒரு வருடம்
செலவு:
- வெளிநாட்டவர்களுக்கான ஹெல்த் கார்டு கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
- UAE குடிமகன் மற்றும் GCC குடிமக்களுக்கான ஹெல்த் கார்டு கட்டணம்: 20 திர்ஹம்ஸ்
- ஸ்மார்ட் சேவை கட்டணம்: 15 திர்ஹம்ஸ்
EHS ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பித்தல்
அமீரகத்தில் பின்வரும் வசதியான முறைகள் மூலம் EHS ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்:
- பதிவு செய்யப்பட்ட டைப்பிங் சென்டர்கள்
- EHS இணையதளம் – ehs.gov.ae
- EHS மொபைல் ஆப் (Android மற்றும் Apple சாதனங்களுக்குக் கிடைக்கும்)
- EHS-ஆல் இயக்கப்படும் எந்தவொரு மருத்துவமனை அல்லது கிளினிக்குகள்
செயல்முறை
நீங்கள் இணையதளம் மூலம் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- முதலில் EHS இணையதளத்தைப் பார்வையிடவும், முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Services’ பகுதிக்குச் சென்று, ‘Health Card’ என்பதைத் தேடவும். அதன் பிறகு, ‘Issue a Health Card’ என்பதைக் கிளிக் செய்து, ‘Start Service’என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் UAE PASS-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்
- ‘I am the applicant’ என்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய ஹெல்த் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் உங்கள் விசா வகைக்கு ‘Resident’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Emirates ID’யை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தவும்.
- அதையடுத்து, உங்கள் முழுப்பெயர், பிறந்த தேதி, தேசியம், பாலினம், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விண்ணப்ப விவரங்களை நிரப்பவும். நீங்கள் UAEPASS-ஐ பயன்படுத்தி உள்நுழைந்தால், இந்த விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்போது, உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் நகலை பதிவேற்றவும். நீங்கள் UAE PASS மூலம் உள்நுழைந்துள்ளதால், கணினி தானாகவே உங்கள் எமிரேட்ஸ் ஐடி தகவலை அணுகும், எனவே நீங்கள் அதை கைமுறையாக பதிவேற்ற வேண்டியதில்லை. ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இறுதியாக, கட்டணங்களை மதிப்பாய்வு செய்து, ‘Pay’ என்பதைக் கிளிக் செய்யவும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தலாம். உங்கள் கட்டணம் உறுதிசெய்யப்பட்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் ஹெல்த் கார்டு உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்படும்.
மேற்கூறிய படிகளைப் பின்பற்றி, EHS ஹெல்த் கார்டைப் பெறுவதன் மூலம், EHS நெட்வொர்க்கிற்குள் மலிவு விலையில் சுகாதார சேவைகளை நீங்கள் அணுகலாம். மேலும், இங்கே உள்ள இணையப் பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தைக் கண்டறியலாம்: https://www.ehs.gov.ae/en/services/health-care-facilities
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel