துபாய்: இந்திய தூதரகத்தின் சான்றளிப்பு சேவைகளுக்கான மையம் புதிய வளாகத்திற்கு இடமாற்றம்..!! எப்போது முதல்..??
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலிருந்து ஆவணச் சான்றளிப்பு (document attestation) சேவைகளைப் பெற விரும்பும் இந்தியர்கள் அக்டோபர் 7 முதல், புதிய இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தூதர் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் ஊடகங்களிடம் பேசிய போது, துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களுக்கான ஆவண சான்றளிப்பு சேவைகளுக்கான மிஷனின் அவுட்சோர்ஸ் சேவை வழங்குநர் அடுத்த வாரம் முதல் பெரிய வளாகங்களில் இருந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
SG IVS Global Attestation Centre -இன் அலுவலகங்கள் தற்போது ஓத் மேத்தாவில் உள்ள பிசினஸ் ஏட்ரியமில் (Business Atrium) அறைகள் 102, 103 மற்றும் 104 இல் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த மையம் வருகின்ற திங்கட்கிழமை முதல், அல் நாஸ்ர் சென்ட்ரலில் உள்ள அலுவலக எண் 302 மற்றும் 104 க்கு மாற்றப்படும் என்று நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் நாஸ்ர் கிளப்பின் முடிவில், ரவுண்டானாவின் இடது பக்கத்தில் அமைந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இடமாற்றம் செயல்முறையின் ஒரு பகுதியாக அக்டோபர் 5 சனிக்கிழமையன்று அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, சான்றளிப்பு சேவைகள் தேவைப்படும் அனைத்து இந்தியர்களும் சிரமங்களைத் தவிர்க்க புதிய முகவரியைக் கவனித்து அதற்கேற்ப திட்டமிடுமாறு கன்சல் ஜெனரல் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரிய வளாகம்
தற்போதுள்ள தூதரக அலுவலக இடம் சுமார் 4,000 சதுர அடியாக இருக்கும் பட்சத்தில் புதிய வளாகம் 6,400 சதுர அடியாக உள்ளது என்றும், இப்போது, விண்ணப்பதாரர்கள் உட்காருவதற்கும், காகிதங்களைச் சென்று பார்ப்பதற்கும், காத்திருப்பதற்கும் போதுமான இடம் இருக்கும் என்றும் தூதரகத்தின் பிரஸ் விங்கின் (Consulate’s Press Wing) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால் அதிக இடம் கிடைக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய இடம் பழைய இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருப்பதாகவும், துபாய் மெட்ரோவை நம்பியிருக்கும் விண்ணப்பதாரர்கள் ஓத் மேத்தாவில் உள்ள அதே மெட்ரோ நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு சராசரியாக 250 சான்றளிப்பு சேவைகளை தூதரகம் செயல்படுத்துகிறது என்று தெரிவித்த அவர், சில நாட்களில் இந்த எண்ணிக்கை 400 ஆகவும் கூடும் என்றும், அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, SGIVS இன் இணையதளம் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு முறையானது, வழக்கமான அப்பாயிண்ட்மெண்ட் மற்றும் பிரீமியம் அப்பாயிண்ட்மெண்ட் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளுடன், ஒரே நாளில் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற அதிகக் கட்டணத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றளிப்பு மையத்தில் பின்வரும் சேவைகள் கிடைக்கும்:
சான்றளிப்பு சேவைகளின் வகைகள்
- வெளிநாட்டு/ UAE குடிமக்களுக்கான சான்றிதழ்
Link: Khaleej Tamil Whatsapp Channel