துபாயின் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டம்: பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்களாக குறைக்கும் என்று தகவல்…

துபாயில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒரு புதிய சாலை மேம்பாட்டுத் திட்டம் ஓத் மேத்தா ஸ்ட்ரீட்டுடன் இணைக்கப்பட்ட பாதைகளில் பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்களாக குறைக்கும் என்று எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
அல் அசயேல் ஸ்ட்ரீட்டை அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட் வழியாக அல் கைல் சாலையை இணைக்கும் மற்றும் ஓத் மேத்தா மற்றும் அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட்களுக்கு எக்ஸிட் வழியை வழங்கும் புதிய திட்டத்திற்கு சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை RTA வழங்கியுள்ளது.
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த திட்டம் நான்கு பெரிய சந்திப்புகள், 4,300 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் 14 கிமீ தொலைவிற்கு சாலைகள் ஆகியவற்றை மேற்பார்வையிடும் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் இந்த மேம்பாடுகள் ஜபீல், அல் ஜட்டாப், அவுட் மேத்தா, உம் ஹுரைர், லதீபாமருத்துவமனை மற்றும் அல் வாஸ்ல் க்ளப் போன்ற பகுதிகளை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் 420,000 க்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் இறுதி முடிவுகள் அவுட் மேத்தா ஸ்ட்ரீட்டின் திறனை ஒரு மணி நேரத்திற்கு 10,400 வாகனங்களில் இருந்து 15,600 வாகனங்களாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது 50 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கும். அதேபோல், இது பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து வெறும் 5 நிமிடங்களாக குறைத்து 75 சதவீத முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷேக் ரஷீத் காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் நான்கு புதிய இன்டர்செக்சன்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
முதல் இன்டர்செக்சன்
முதல் இன்டர்செக்சன் ஆனது, ஓத் மேத்தா மற்றும் ஷேக் ரஷித் ஸ்ட்ரீட் சந்திப்பில், இரண்டு இடங்களிலிருந்தும் போக்குவரத்திற்காக ஒரு புதிய இடதுபுறம் திரும்பும் பாதையுடன் அமைந்துள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு 1,800 வாகனங்களை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட்டில் உள்ள சர்வீஸ் சாலையில் தற்போதைய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், அல் ஜஹ்ராவி ஸ்ட்ரீட்டில் இருக்கும் பாலத்துக்கும் எக்ஸிட் பாதைக்கும் இடையே மேம்படுத்தப்படும்.
மேலும், ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட்டில் இருந்து துபாய்-அல் அய்ன் சாலைக்கு வரும் போக்குவரத்திற்கான வலதுபுறம் திரும்பும் பாதைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்தப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 4,000 வாகனங்களை அனுமதிக்கும் வகையில் சாலையின் திறன் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்டர்செக்சன்
இரண்டாவது இன்டர்செக்சன் அல் அசயேல் மற்றும் அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட்களுடன் அவுட் மேத்தா ஸ்ட்ரீட் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அல் அசயேல் ஸ்ட்ரீட்டை அல் கைல் சாலையை அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட் வழியாக இணைக்கும் இரண்டு பாலங்கள் கட்டப்படும்.
முதல் பாலம், இரண்டு பாதைகள், ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாகனங்களை அனுமதிக்கும் திறன் கொண்டது மற்றும் அல் அசயேலில் இருந்து அல் நவ்ராஸ் நோக்கி போக்குவரத்துக்கு சேவை செய்யும். இரண்டாவது பாலம், மூன்று பாதைகள் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 3,600 வாகனங்களை அனுமதிக்கும், மேலும் அல் கைல் சாலையில் இருந்து அல் அசயேல் நோக்கிச் செல்லக் கூடிய போக்குவரத்தை கையாளும்.
கூடுதலாக, ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அல் அசயேலில் இருந்து அவுட் மேத்தா ஸ்ட்ரீட் வரை இடதுபுறம் செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தனித்தனியாக இருவழிப் பாலம் கட்டப்படும். அல் வாஸ்ல் கிளப்பின் நுழைவாயிலுக்குச் செல்லும் சாலையிலும், அல் நவ்ராஸ் தெருவின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களிலும், தற்போதைய போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இன்டர்செக்சன்
மூன்றாவது இன்டர்செக்சன் அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலை சந்திப்பில் அமைந்திருக்கும், மேலும் பிசினஸ் பே கிராசிங்கை நோக்கி தொடரும் இரண்டு சாலைகளிலிருந்தும் போக்குவரத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவழிப் பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
கூடுதலாக, அல் கைல் சாலையை நோக்கி வெளியேறும் திறனை இரண்டு பாதைகளாக அதிகரிப்பதன் மூலம் அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட் மேம்படுத்தப்படும். அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட்டின் இருபுறமும் ஒரு சர்வீஸ் சாலை அமைக்கப்படுவதுடன் பார்க்கிங் இடங்கள் வழங்கப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
நான்காவது இன்டர்செக்சன்
நான்காவது இன்டர்செக்சன் ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் மற்றும் அவுட் மேத்தா ஸ்ட்ரீட் சந்திப்பில் அமைந்துள்ளது. அல் கைல் சாலையில் இருந்து துபாய்-அல் அய்ன் சாலை வரையிலான போக்குவரத்திற்காக இடதுபுறம் திரும்பும் வளைவில் ஒரு பாதை அமைக்கப்படும், இது ஒரு மணி நேரத்திற்கு 900 வாகனங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 1,800 வாகனங்களாக சாலையின் திறனை இரட்டிப்பாக்குகிறது.
துபாய்-அல் அய்ன் சாலையில் இருந்து அல் நவ்ராஸ் ஸ்ட்ரீட்டுக்கு வரும் போக்குவரத்திற்கு சேவை செய்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு 1,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்ட ஒற்றை வழி சுரங்கப்பாதையும் கட்டப்படும், இது தற்போதைய போக்குவரத்து நெரிசலை சமாளிக்க உதவுகிறது.
தற்போதுள்ள பாலத்தில் பாதைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும், இது தற்போது அல் கைல் சாலையில் இருந்து அவுட் மேத்தா ஸ்ட்ரீட்டை நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது. பாலம் இரண்டு முதல் மூன்று வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும், இதன் திறன் ஒரு மணி நேரத்திற்கு 2,200 வாகனங்களில் இருந்து 3,300 வாகனங்களாக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷேக் ரஷித் காரிடார் டெவலப்மெண்ட் திட்டம்
ஷேக் ரஷித் காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக RTA ஆல் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய மூலோபாய சாலை திட்டங்களில் அல் அசயேல் ஸ்ட்ரீட் மேம்பாடு ஒன்றாகும்.
துபாய்-அல் அய்ன் சாலையிலிருந்து ஷேக் முகமது பின் சையத் சாலை வரையிலான 8 கிமீ தூரம் வரை ராஸ் அல் கோர் சாலையை இந்த ஆணையம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இது மொத்தம் 2,000 மீட்டர் நீளமுள்ள பல பாலங்களை நிர்மாணித்தது மற்றும் ராஸ் அல் கோர் சாலையை மூன்று வழிகளில் இருந்து ஒவ்வொரு திசையிலும் ஆறு வழிகளாக விரிவுபடுத்தியது, மேலும் இருபுறமும் இரண்டு வழி சேவை சாலையும் உள்ளது.
இந்த மேம்படுத்தல்கள் ராஸ் அல் கோர் சாலையின் திறனை ஒரு மணி நேரத்திற்கு 10,000 வாகனங்களாக உயர்த்தி, பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்களாக குறைத்து, போக்குவரத்து ஓட்டம் மற்றும் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துகிறது. லகூன்ஸ், துபாய் க்ரீக், மெய்டன் ஹொரைசன், ராஸ் அல் கோர், அல் வாஸ்ல் மற்றும் நாட் அல் ஹமர் உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுப் பகுதிகளுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel