துபாயின் பிரபலமான மால்களில் புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் அறிமுகம்!! எப்போது முதல்..??
துபாயின் முதன்மை பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின் (Parkin) நிறுவனம், துபாயில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (MoE), சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்டிஃப் ஆகிய மால்களில் ஜனவரி 1, 2025 முதல் வாகனங்களுக்கான புதிய கட்டண பார்க்கிங் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
பார்க்கின் நிறுவனம், டெவலப்பர் மஜித் அல் ஃபுத்தைம் (MAF) ப்ராப்பர்ட்டிஸ் உடன் இணைந்து, துபாய் எமிரேட்டில் உள்ள மூன்று பிரபலமான மால்களிலும் தடை இல்லாத பார்க்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. எவ்வாறாயினும், ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் கீழ் மால் பார்க்கிங் கட்டணம் மாறாமல் இருக்கும் என்று பார்கின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய பார்க்கிங் அமைப்பு எவ்வாறு செயல்படும்?
பார்க்கின் அறிமுகப்படுத்தவுள்ள தடையற்ற பார்க்கிங் தொழில்நுட்பமானது, மாலுக்கு வரும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிடங்களுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியேறும் போதும் கட்டணத்தைச் செலுத்த தடைகளில் நின்று காத்திருக்க வேண்டிய தேவையை (barrierless parking) நீக்குகிறது.
அதாவது புதிய பார்க்கிங் அமைப்பில் இருக்கும் மேம்பட்ட கேமராக்கள் தானாகவே வாகனங்களின் உரிமத் தகடுகளைப் (license plates) படம்பிடித்து, ஒவ்வொரு வாகனத்தின் முன்னேற்றம் மற்றும் தங்கியிருக்கும் கால அளவைக் கண்காணிக்கும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமால்களில் உள்ள பார்க்கிங் பகுதிக்குள் ஓட்டுநர்கள் நுழையும்போது, பார்க்கிங் செலவுகள் குறித்த SMS அல்லது Parkin ஆப் நோட்டிபிகேஷன்களை அவர்கள் பெறுவார்கள். மேலும், பார்வையாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் Parkin ஆப் அல்லது இணையதளம் மூலம் செலுத்தலாம்.
புதிய தடையற்ற பார்க்கிங் அனுபவம் மூன்று மால்களில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான கார்களுக்கான பார்க்கிங் அணுகலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மால்களில் மொத்தம் 21,000 பார்க்கிங் இடங்கள் உள்ளன.
இது குறித்து பார்க்கின் நிறுவனத்தின் CEO முகமது அப்துல்லா அல் அலி பேசிய போது, புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் பார்க்கிங் பகுதிகளில் நெரிசலைக் குறைத்து, சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தை செயல்படுத்துவதுடன், துபாயில் உள்ள சில பரபரப்பான மற்றும் நன்கு அறியப்பட்ட சில்லறை விற்பனை இடங்களில் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று உறுதியளித்துள்ளார்.
புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம், எமிரேட்டில் முதல் அமைப்பாக இருக்காது. ஏனெனில், துபாய் மாலின் சில பகுதிகளில் கட்டணம் செலுத்திய பார்க்கிங் சேவைகளுக்கு இதே போன்ற அமைப்பு உள்ளது. இருப்பினும், அந்த வசதி சாலிக் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. எனவே, துபாய் மால் பார்க்கிங் கட்டணம் சாலிக் பயனர் கணக்குகளில் இருந்து தானாகவே கழிக்கப்படும்.
துபாய் பினான்ஷியல் மார்க்கெட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான (PJSC) பார்கின், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற அதிக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான மேம்பாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel