துபாய்: உங்கள் பகுதியில் சாலை சரியில்லையா? பாதையில் தடங்கள் உள்ளதா? நீங்களே புகார் அளிக்கலாம்.. எப்படி தெரியுமா?

துபாயில் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் சேதமடைந்த சாலைகள், மரங்கள் கீழே விழுதல் அல்லது வேறு ஏதேனும் தடங்களை புகைப்படம் எடுத்து, அதை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் ‘Dubai Now’ செயலியில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக டிஜிட்டல் துபாய், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் ‘Madinati’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது சாலைகள் அல்லது நகரம் முழுவதும் உள்ள வேறு எந்த இடத்திலும் காணப்படும் தேவையற்ற பொருட்களைப் புகாரளிப்பதை எளிதாக்குகிறது. இதில் பயனர்கள் புகைப்படத்தை கிளிக் செய்து அதை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Dubai Now சூப்பர் செயலியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையை நகரின் வளர்ச்சியில் ஈடுபட அனுமதிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
துபாய் நவ் சூப்பர் ஆப்ஸில் கிடைக்கும் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 280 சேவைகளில் Madinati-யும் ஒன்றாகும். இது டிஜிட்டல் துபாய், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் முனிசிபாலிட்டி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
இது குறித்து விளக்கமளிக்கையில் இந்த தளத்தின் வழியாக குடியிருப்பாளர்கள் சேதமான சாலை அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற பொருளை கண்டால், அவர்கள் படம் எடுத்து அனுப்பலாம், AI அமைப்பு அதைக் கண்டறிந்து படத்தைப் புரிந்துகொண்டு RTA அல்லது துபாய் முனிசிபாலிட்டிக்கு அனுப்பும் என்று டிஜிட்டல் துபாயின் CEO மட்டர் அல் ஹெமேரி விளக்கமளித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், புகாரைத் தெரிவிக்கும் நபரிடமிருந்து தேவைப்படும் ஒரே தகவல் இருப்பிடத்தை உறுதிப்படுத்துவது என்றும், இருப்பினும் கணினியால் இருப்பிடத்தையும் கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்க வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எப்போதும் ஆராய்ந்து வருவதாகவும் அல் ஹெமேரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, அரசு துறைகளில் திறமை மற்றும் பணியாளர்களை சிறப்பாக நிர்வகிக்க, டிஜிட்டல் துபாய் புதிய தீர்வுகளை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது, இது பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி செயல்முறைகளை மேலும் துரிதப்படுத்தும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel