UAE: ராஸ் அல் கைமா முழுவதும் 20 ஸ்மார்ட் கேட்கள் அறிமுகம்..!! சாலை பாதுகாப்பை மேம்படுத்த முயற்சி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், ராஸ் அல் கைமா எமிரேட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எமிரேட் முழுவதும் சுமார் 20 ஸ்மார்ட் கேட்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக RAK காவல்துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட் கேட்கள் எமிரேட்டின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் நிறுவப்படும் என்றும் அதிகாரம் தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி ‘Safe City Digital System’ எனப்படும் பரந்த பாதுகாப்பான திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும், போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் அவசரநிலைகளை கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ராஸ் அல் கைமா போலீஸ் ஜெனரல் கமாண்ட் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, இந்த கேட்களில் உள்ள திரைகள் வானிலை புதுப்பிப்புகள் மற்றும் சாலை நிலைமைகள் குறித்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிப்பதான் மூலம் பாதுகாப்பான பயண சூழலுக்கு பங்களிக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்சமயம், எமிரேட்டில் 20 ஸ்மார்ட் கேட்களை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது என்று ராஸ் அல்-கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி பின் அல்வான் அல் நுஐமி தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த கேட்கள் முக்கிய செயல்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்படும், இது நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.
அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட் கேட்களில் AI-இயங்கும் கேமராக்கள் இடம்பெறும், அவை போக்குவரத்து சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் என்றும் RAK காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel