UAE: பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு ரோந்துப் பணியைத் தொடங்கிய உம் அல் குவைன் காவல்துறை!!

உம் அல் குவைன் காவல்துறையினர் மாலை நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எமிரேட்டின் தெருக்களைச் சுற்றி இரவு ரோந்துப் பணியைத் தொடங்கி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியானது, எமிரேட்டில் உள்ள குடியிருப்பு சுற்றுப்புறங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் கூடும் இடங்கள், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில்துறை பகுதிகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அதிகாரம் தெரிவித்துள்ளது.
மேலும், உம் அல் குவைன் காவல்துறையின் ஜெனரல் கமாண்ட், இரவில் காவல்துறையின் ரோந்து கார்கள் தெருக்களில் வலம் வருவதைக் காட்டும் வீடியோ ஒன்றினை X தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
கடந்த மார்ச் மாதம், சில ஓட்டுநர்கள் ஒன்று கூடி எந்தவித அனுமதியும் பெறாமல் அமீரகத்தின் தெருக்களில் அஜாக்கிரதையாக பந்தயத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, உம் அல் குவைன் காவல்துறை அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தது.
இந்த ஆபத்தான நடத்தை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மற்ற சாலைப் பயனர்களையும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில், சாத்தியமான போக்குவரத்து விபத்துகளைத் தடுக்க, சாலைகளில் கவனக்குறைவாக நடந்துகொள்வதைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கும் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel