அமீரக செய்திகள்

துபாய் பீச்சில் குளிக்கும் போது பரிதாபமாக உயிரிழந்த இந்திய சிறுவன்…

துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த 15 வயது இந்திய சிறுவன் ஆக்ரோஷமான அலையில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துபாயில் இயங்கி வரும் இந்தியன் மாடல் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அகமது அப்துல்லா மஃபாஸ் என்ற மாணவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை நேரம் தனது பெற்றோருடன் கடற்கரையில் உற்சாகமாக குளிக்கச் சென்ற போது இந்த விபரீதம் நடத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவரின் தந்தை முகமது அஷ்ரஃப் என்பவர் ஊடகங்களிடம் பகிர்ந்த போது, “அவர் அன்று தனது நண்பர்களுடன் செல்ல வேறு திட்டங்களை வைத்திருந்தார், ஆனால் நாங்கள் அவரை எங்களுடன் வரும்படி வற்புறுத்தினோம்” என்று விவரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குடும்பமாக தேநீர் அருந்தியதும் அவருடைய சகோதரி தன்னுடன் கடலில் குளிக்க அழைத்ததாகவும், தந்தை குளியலறைக்குச் சென்றதால், அம்மா அவர்களுடன் கடற்கரையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் இருவரும் அதிக தூரம் செல்லாமல் கரைக்கு அருகிலேயே நீந்திக் கொண்டிருந்ததாகவும், இருந்தபோதிலும் பெரிய அலை அவர்களைத் தாக்கியதால் மகனும் மகளும் நீந்த முடியாமல் திணறியதாகவும் கரையிலிருந்து பார்த்த தாயார் தெரிவித்துள்ளார். பின்னர், கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தன் சகோதரனைப் பற்றிக்கொள்ள அவரது சகோதரி தீவிரமாக முயற்சித்ததாகவும், ஆனால் அவரையும் கடல் உள்ளிழுத்ததாகவும் சமூக சேவகர் இப்ராஹிம் பெரிக் என்பவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்த ஒரு அரேபிய நீச்சல் வீரர் விரைந்து சென்று மஃபாஸின் அக்காவை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்ததாகவும், அதற்குள் அந்த சிறுவன் காணாமல் போனதாகவும் கூறுகின்றனர்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

கேரளாவைச் சேர்ந்த இந்த குடும்பம், பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறது. இந்நிலையில் மஃபாஸின் தந்தை தனது மகளைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சமூக சேவகரின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் தேடுதல் நடத்தியும் மூழ்கிய இளம் மாணவரின் உடல் சனிக்கிழமை வரை மீட்கப்படவில்லை என்று முன்னர் தெரிவித்த நிலையில் அதன் பின்னர் உடலை மீட்டெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் அவரது பெற்றோருக்கு மூன்றாவது மகன் என்றும், பணிவாகப் பேசக் கூடியவர் என்றும் தெரிவித்த அவரது உறவினர் ஒருவர், ஆவணங்கள் மற்றும் பிற சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்ட பிறகு சிறுவனின் உடல் துபாயில் அடக்கம் செய்யப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!