ADVERTISEMENT

துபாயில் வரவிருக்கும் புதிய சொகுசு விமான நிறுவனமான ‘DAMAC Air’.. அறிவிப்பை வெளியிட்ட டமாக் ப்ராப்பர்ட்டீஸ்…

Published: 12 Nov 2024, 10:50 AM |
Updated: 12 Nov 2024, 10:56 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை தளமாகக் கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனமான DAMAC Properties, ‘Damac Air’ என்ற புதிய சொகுசு விமான நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இது சீஷெல்ஸ் (Seychelles), மாலத்தீவுகள், பாலி, போரா போரா, பிஜி மற்றும் ஹவாய் ஆகிய ஆறு விரும்பப்படும் சுற்றுலா இடங்களுக்கு சொகுசு விமானங்களை இயக்கும் என்று அறிவித்துள்ளது. தற்பொழுது, டமாக் அதன் சமூக ஊடக சேனல்களில் இது தொடர்பான டீஸர் வீடியோக்களையும் உள்ளடக்கத்தையும் பகிர்ந்து வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் “உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா பகுதிகளுக்கான இணையற்ற பயணங்களை நாங்கள் வழங்கவிருக்கிறோம்” என்று விமான நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு தனியார் எமிராட்டி ப்ராப்பர்ட்டி டெவலப்பரால் நிறுவப்பட்ட முதல் விமான நிறுவனமாக Damac Air தனித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் தனிநபர்கள் அதன் இணையதளத்தில் பதிவு செய்தவுடன் இலவச பயணத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் “டமாக் ஏர் பயணிகளுக்கு பயணத்தை விட மேலான அனுபவங்களை வழங்கும். உங்கள் விடுமுறையை நாங்கள் மாற்றவில்லை; நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை நாங்கள் மாற்றுகிறோம். ஆடம்பரத்தின் புதிய சகாப்தத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” என்று விமான நிறுவனம் விவரித்துள்ளது. இருப்பினும் இந்த விமான சேவை எப்போது துவங்கப்படும் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT