கூடுதல் சாலிக் கேட்களால் புலம்பும் துபாய்வாசிகள்..!! டோல்கேட்டை தவிர்க்க நினைத்தால் எரிபொருள் செலவு அதிகரிக்கும் எனவும் கவலை..!!
துபாயில் இம்மாதம் 24 ஆம் தேதி முதல் புதிய சாலிக் கேட்கள் செயல்படத் தொடங்கும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே, துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதிகரித்து வரும் பயணச் செலவுகள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
அல் கைல் சாலையில் உள்ள பிசினஸ் பே கிராஸிங், அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட்டிற்கு இடையே அல் சஃபா சவுத் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சாலிக் கேட்கள் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்பதால், பலர் தங்கள் பட்ஜெட் திட்டங்களை மீண்டும் கணக்கிடத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு புதிய டோல் கேட்கள் திறக்கப்படும் போது, துபாயில் உள்ள சாலிக் கேட்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயரும். இதனால் அன்றாடம் சாலிக் கேட் வழியாகப் பயணிக்கும் குடியிருப்பாளர்கள் அதிகரிக்கும் போக்குவரத்து செலவுகள் குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் 80 கிமீக்கு மேல் பயணம் செய்யும் குடியிருப்பாளர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் சாலிக் கட்டணத்திற்காக சுமார் 350 திர்ஹம்ஸ் செலவு செய்வதாகவும், போதுமான நேரம் கிடைக்கும்போது, ஷேக் முகமது பின் சையத் சாலையில் சாலிக் கேட் இல்லாததால் அந்த வழியில் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது குறித்து மார்க்கெட்டிங் நிர்வாகியாகப் பணிபுரியும் அவர் பேசுகையில், “நான் வழக்கமாகப் பயணிக்கும் இத்திஹாத் சாலையில் செல்லும் போது, மூன்று சாலிக் கேட்களைக் கடந்து செல்ல சுமார் 12 திர்ஹம் செலுத்துகிறேன். இதற்குபதிலாக, ஏர்போர்ட் டன்னல் ரோட்டில், ஷேக் சையத் சாலையில் உள்ள அல் சஃபா கேட் வழியாகச் சென்றால் சில சமயங்களில் 4 திர்ஹம்ஸ் செலுத்துகிறேன். இப்போது மொத்தம் மாதாந்திர சாலிக் பட்ஜெட் 350 திர்ஹம்ஸ்-இல் இருந்து 500 திர்ஹம்ஸை தாண்டும்” என்று தனது புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார்.
மாற்று வழிகளைத் தேடும் ஓட்டுநர்கள்:
துபாயில் கூடுதலாக 2 புதிய சாலிக் கேட்கள் திறக்கப்பட உள்ள நிலையில், பிசினஸ் பே பாலம் வழியாக அடிக்கடி சென்று வரும் மற்றொரு வாகன ஓட்டி புதிதாக செயல்படவுள்ள சாலிக் கேட்களினால் செலவு கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக மாற்று வழிகளைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
துபாயில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் பலரும், தற்பொழுது டோல் கேட்களைத் தவிர்ப்பது குறித்தே யோசித்து வருகின்றனர். இவ்வாறு சாலிக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக மாற்று வழியைத் தேர்ந்தெடுத்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக குடியிருப்பாளர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதிய டோல்கேட்கள் போக்குவரத்தை எளிதாக்குமா?
எவ்வாறாயினும், கூடுதல் சாலிக் கேட்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த பரபரப்பான சாலைகளில் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதாவது, சாலிக் கேட் அதிகரிக்கும் போது, போக்குவரத்து ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு மாற்றப்படும், இதனால் விமான நிலைய சுரங்கப்பாதை சாலையில் நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel