துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்: இலட்சம் பேர் கலந்து கொள்ளும் துபாய் ரன்னில் நீங்களும் இலவசமாக பங்கேற்கனுமா..?? பதிவு செய்வது எப்படி…??
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் கடந்த 2017-ம் ஆண்டு மக்களுக்கு உடற்பயிற்சி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (Dubai Fitness Challenge) எனும் நிகழ்வினை துவங்கி வைத்து அதில் கலந்து கொள்ளவும் செய்தார். ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்த பதிப்பில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். அதில் துபாய் ரன் மற்றும் துபாய் ரைடு மக்களிடையே பிரசித்தி பெற்றதாகும்.
துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) மாபெரும் நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன்னின் இந்த வருடத்திற்கான பதிப்பு வருகின்ற நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. ‘Mai Dubai’ வழங்கும் துபாய் ரன் 2024இல் பங்கேற்க குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் என பலரும் ஆவலுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் துபாய் ரன்னில் பங்கேற்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து முக்கிய விபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
துபாய் ரன் வழித்தடங்கள்:
ஆரம்ப நிலை வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு 5 கிமீ பாதை மற்றும் அனுபவமுள்ள ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மிகவும் சவாலான 10 கிமீ பாதை என இரண்டு வகையான வழித்தடங்கள் துபாய் ரன்னில் இடம்பெற உள்ளன.
- 5 கிமீ பாதை துபாய் மாலுக்கு அருகிலுள்ள ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வார்டில் (sheikh mohamed bin rashid boulevard) தொடங்கி, மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருகில் ஷேக் சயீத் சாலையில் முடிவடைகிறது.
- மறுபுறம், 10 கிமீ பாதை ஷேக் சயீத் சாலையில் உள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சருக்கு அருகில் தொடங்கி எமிரேட்ஸ் டவர்ஸுக்கு அருகிலுள்ள DIFC கேட் கட்டிடத்தில் முடிவடைகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇரண்டு வழிகளிலுமே துபாய் ரன்னில் கலந்து கொண்டு செல்பவர்கள், ஷேக் சையத் சாலையில் செல்லும் போது, துபாயின் மிகவும் பிரபலமான சில அடையாளங்களை கடந்து செல்வார்கள். கடந்த ஆண்டு துபாய் ரன் பதிப்பில் சுமார் 226,000 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரிஜிஸ்டரேஷன் கட்டாயம்
இந்த நிகழ்வு இலவசம் என்றாலும், பங்கேற்பாளர்கள் அனைவரும் பதிவு செய்வது கட்டாயமாகும். இதற்கு dubairun.com என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்ததும், Instagram இல் @dubaifitnesschallenge ஐப் பின்தொடர்வதன் மூலம் துபாய் ரன் தொடர்பான சமீபத்திய தகவலை பெறலாம் மற்றும் அனைத்து அத்தியாவசிய நிகழ்வு விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள ‘Need to Know’ பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பதிவுசெய்தவுடன், பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பராமரிக்க இரு வழிகளுக்கும் வரும் நேரத்தை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கலாம். தாமதமாக வருபவர்களுக்கு முழு வழியையும் முடிக்க நேரமில்லாமல் போகலாம் என்பதால், முன்கூட்டியே வந்து சேருவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.
துபாய் ரன்னிற்காக பதிவு செய்யும் போது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பதிவை 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்ய வேண்டும். அதே சமயம் 13 முதல் 21 வயதுடையவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் துபாய் ரன்னிற்காக பதிவு செய்யலாம்.
T-shirt மற்றும் bib சேகரிப்பு
பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் நவம்பர் 11 முதல் நவம்பர் 23 வரை துபாய் முனிசிபாலிட்டி Z’abeel Park 30×30 Fitness Village இலிருந்து தங்கள் டி-ஷர்ட்கள் மற்றும் bib-களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் வழியை மாற்ற முடிவு செய்தால், உங்களின் தற்போதைய பதிவை ரத்து செய்துவிட்டு, மற்ற பாதைக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
பார்க்கிங், மெட்ரோ அணுகல்
துபாய் மெட்ரோவானது ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இடமளிக்கும் வகையில் துபாய் ரன் நடைபெறும் நாளில் சீக்கிரமாகவே இயங்க ஆரம்பித்து விடும் என்பதால், பங்கேற்பாளர்கள் எளிதான அணுகலுக்காக அந்தந்த இடங்களுக்கு மெட்ரோவில் பயணிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும், நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பினால், 5 கிமீ பாதையில் பங்கேற்கும் நபர்கள் துபாய் மாலில் கார்களை நிறுத்திவிட்டு வேர்ல்டு டிரேடு சென்டரின் மெட்ரோவில் பயணிக்கலாம். 10 கிமீ பாதையில் பதிவு செய்தவர்களுக்கு வேர்ல்டு டிரேடு சென்டரில் பார்க்கிங் வசதி உள்ளது. பின் மெட்ரோ வழியாக எமிரேட்ஸ் டவர்ஸ் நிலையத்தை எளிதாக அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel