துபாய்: பயணிகள் லக்கேஜிற்காக காத்திருக்க தேவையில்ல.. வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.. DWC புதிய டெர்மினலில் வரும் நடைமுறை..!!
உலகளவில் அதிகம் பேர் விரும்பி செல்லக்கூடிய இடங்களில் ஒன்றாக இருக்கும் துபாயில் பயணிகளுக்காக இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்று DXB என்று சொல்லக்கூடிய துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று சொல்லக்கூடிய துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) ஆகும்.
இந்த துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் முனையத்திற்கு (new terminal) வரும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், விமானத்திலிருந்து இறங்கும் போது, அவர்களின் லக்கேஜ்கள் டெர்மினலில் தயாராக இருக்கும் அல்லது பயணிகளின் வீடுகள் அல்லது ஹோட்டல்களுக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படும் என்று dnata நிறுவனத்தின் CEO ஸ்டீவ் ஆலன் தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான dnata, துபாய் விமான நிலையங்களில் இருந்து செயல்படும் விமான நிறுவனங்களுக்கான ஒரே விமான சேவை வழங்குநராகும். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே இலக்கு என்றும், காகிதத்தை விட மேம்பட்ட பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி, வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் விமான நிலையத்தின் வழியாக தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தியில் DWC – அல் மக்தூம் இன்டர்நேஷனல் 14 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டதிலிருந்து, உலகின் பரபரப்பான விமான நிலையத்தை உருவாக்க மையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. சுமார் 128 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த பயணிகள் முனையம் ஆண்டுதோறும் 260 மில்லியன் பயணிகளை கையாளும் என்றும், துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட 5 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஎதிர்கால விமான நிலையம்
எதிர்காலத்தில் இன்னும் நிறைய ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோனமி போன்ற முறைகள் செயல்படுவதை நாம் இங்கு காணலாம் என்று ஆலன் குறிப்பிட்டுள்ளார். தற்போது, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி டிராக்டர்களை சோதனை செய்து வருவதாகவும், விமான நிலையம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டதால் புதிய தொழில்நுட்பங்களுக்கு இது ஒரு சிறந்த சோதனைக் களம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆலன், “ஒரு ஓடுபாதை மற்றும் பயணிகள் டெர்மினல் உள்ளது, ஆனால் புதிய விஷயங்களைச் சோதிக்க இன்னும் நிறைய உள்ளன” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த விமான நிலையத்தில் எதிர்கால உபகரணங்கள் மற்றும் பயணிகளின் அனுபவத்தை வடிவமைக்கும்போது, உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதையும் ஆலன் வெளிப்படுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel