ADVERTISEMENT

அமீரகத்தின் 53வது தேசிய தினத்திற்கு 53 ஜிபி இலவச டேட்டா.? வாடிக்கையாளர்களை அறிவுறுத்திய நிறுவனம்.!!

Published: 23 Nov 2024, 10:39 AM |
Updated: 23 Nov 2024, 12:16 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான e& (etisalat), நாட்டில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு சமூக ஊடகங்களில் வெளியாகும் இலவச சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் 53 வது ‘ஈத் அல் எதிஹாத்’ என்று இந்தாண்டு முதல் அழைக்கப்படும் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 53 ஜிபி டேட்டா பேக்கேஜை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக X தளத்தில் e& வெளியிட்ட பதிவில், “போலி சலுகைகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும், எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்வதற்கு முன் எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்கவும்” என்று அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான e&, கடந்த காலங்களில் தனது UAE வாடிக்கையாளர்களுக்கு சமூக ஊடக மோசடிகள் குறித்து இதே போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

பெரும்பாலும் மோசடிக்காரர்கள் கவர்ச்சிகரமான டேட்டா பேக்கேஜ்கள், இலவச பணம் மற்றும் e& கணக்கு வைத்திருப்பவர்களுக்கு “வெற்றி பெறும் லாட்டரி” என போலியான தகவல்கள் மூலம் அமீரக குடியிருப்பாளர்களை கவர்ந்திழுப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மோசடிகளை எவ்வாறு கண்டறிவது?

e& நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆலோசனையில், “மோசடி செய்பவர்கள் உங்களை WhatsApp அல்லது சமூக ஊடக கணக்குகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். அவர்களிடம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (வங்கி விவரங்கள், டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவை) ஒருபோதும் பகிர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

மனதில் கொள்ள வேண்டியவை

அனைத்து e& அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்குகளும் பச்சை நிற டிக் மூலம் சரிபார்க்கப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் செய்திகளைக் காணும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பணம் செலுத்தவோ அல்லது கணக்குகளுக்கு ரீசார்ஜ் செய்யவோ வேண்டாம்.
  • நீங்கள் செய்யாத கோரிக்கைக்கு OTP ஐப் பகிர வேண்டாம்.
  • டொமைன் பெயர் “etisalat.ae” என்பதைச் சரிபார்க்கும் முன், இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  • மோசடி செய்திகளில் பல எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருக்கும்.
  • வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பணம் செலுத்த e& உங்களை ஒருபோதும் கேட்காது.
  • e& ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு எந்தவொரு கட்டணத்தையும் மாற்றும்படி உங்களை ஒருபோதும் கேட்காது

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel