துபாய் குளோபல் வில்லேஜின் தேசிய தின கொண்டாட்டம்: வானவேடிக்கை, ட்ரோன் ஷோ உள்ளிட்ட முழு பட்டியலும் இங்கே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒவ்வொரு எமிரேட்ஸும் ஈத் அல் எதிஹாட் என்று அழைக்கப்படும் நாட்டின் 53வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில், துபாயில் உள்ள பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜில் டிசம்பர் 4, 2024 வரை தேசிய தினத்தின் மறக்க முடியாத கொண்டாட்டத்தை நடத்த உள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தேசிய தினத்தை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், திகைப்பூட்டும் வானவேடிக்கைகள், ட்ரோன் ஷோக்கள் மற்றும் உணவு அனுபவங்கள் முதல் நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை உணர்த்தும் அனுபவங்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் குளோபல் வில்லேஜில் நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, குளோபல் வில்லேஜ் அதன் வாயில்கள் மற்றும் அடையாளங்களை அமீரகக் கொடியின் துடிப்பான வண்ணங்களில் ஒளிரச் செய்யும் , பூங்கா முழுவதும் சின்னமான அலங்காரங்கள் மற்றும் லைட்டிங் காட்சிகளுடன் மாற்றப்படும். இந்தக் கலைச் சூழல், வேறு எதிலும் இல்லாத ஒரு கொண்டாட்டத்திற்கு மேடை அமைத்து, ஒற்றுமையின் உணர்வை உயிர்ப்பிக்கும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதுமட்டுமில்லாமல், நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை, அமீரகக் கொடியின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்கவர் இரவு வானவேடிக்கை காட்சி, இரவு 9 மணிக்கு வானத்தை ஒளிரச் செய்யும். மேலும், டிசம்பர் 2 அன்று, பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு ட்ரோன் ஷோ நடத்தப்படும், இது அவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இவற்றுடன் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, பூங்காவின் பிரதான மேடையில் டிசம்பர் 1 முதல் 3 வரை ‘Hawa Emarati’ என்ற பிரம்மாண்ட நாடக நாடகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட இந்த நாடகம், 1971 இல் ஐக்கிய அரபு அமீரகம் உருவானதன் பின்னணியில் ஒரு எமிராட்டி திருமணத்தை சித்தரிக்கும் ஒன்பது பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
பாரம்பரிய உடைகள், பாடல்கள் மற்றும் நடனங்களை ஒரு புதிய படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தும், இது தினமும் இரவு 7.05 மற்றும் 9.40 மணிக்கு இருமுறை நடைபெறும். கூடுதலாக, விருந்தினர்கள் லிவா மற்றும் ஹர்பியா போன்ற எமிராட்டி இசைக்குழுக்களின் நேரடி நிகழ்ச்சிகளையும் அனுபவிக்கலாம்.
குளோபல் வில்லேஜில் உள்ள UAE பெவிலியன், 971 பெவிலியன் மற்றும் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அறக்கட்டளை பெவிலியன் போன்ற பெவிலியன்களில் தனித்துவமான தேசிய தின நினைவுப் பொருட்கள் உட்பட பிரத்தியேகமான ஷாப்பிங் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஹம்தான் பின் முகமது ஹெரிடேஜ் சென்டரால் இயக்கப்படும் ஹெரிட்டேஜ் வில்லேஜ், உண்மையான எமிராட்டி கைவினைப் பொருட்களைக் காண்பிக்கும், இது விருந்தினர்கள் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராய அனுமதிக்கிறது.
அத்துடன் உணவு பிரியர்கள் பல்வேறு கியோஸ்க்களில் பாரம்பரிய எமிராட்டி உணவு வகைகளை அனுபவிக்க முடியும், இதில் ரசிகர்களுக்கு பிடித்தமான லுகைமட் மற்றும் ரேகாக் ரொட்டி போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel