இந்தியாவிற்கு பணம் அனுப்ப இதுதான் சரியான நேரம்!! திர்ஹம்ஸ்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹம்ஸ்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு தற்போது சரிந்துள்ளது. ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில நாட்களாக பலவீனமான அமெரிக்க டாலரால் பயனடைந்தபோதும், உள்ளூர் பங்குகளில் இருந்து தொடர்ந்து வெளியேறுவது இந்திய நாணயத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதாவது கடந்த திங்களன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு 84.11 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் அமீரகத்தின் ஒரு திர்ஹம்ஸிற்கு நிகரான இந்திய ரூபாய் 22.91 எனும் அளவிற்கு சரிந்தது. இது கடந்த வாரம் ஏற்பட்ட பணமதிப்பு வீழ்ச்சியை விடவும் அதிகமாகும். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேலும் வீழ்ச்சியடைந்து ஒரு திர்ஹம்ஸ் 22.92 ரூபாய் எனும் புதிய அளவை எட்டியுள்ளது.
இது தவிர இந்திய பங்குச்சந்தையிலும் BSE சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஈக்விட்டி குறியீடுகள் ஒவ்வொரு நாளும் தலா 1.5 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டுள்ளன. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்களால் பங்குகளை விற்பதன் மூலம் ஏற்படும் அழுத்தம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபரில் 11 பில்லியன் டாலர் இந்திய பங்குகளை விற்றுள்ளனர் என்பதும், அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அரசாங்கப் பத்திரங்களில் தங்களின் முதலீடுகளை குறைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதொடர்ச்சியாக பங்குகளில் சரிவு இருந்தபோதிலும், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அரசாங்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய வங்கியின் செயல்பாடுகள் இந்திய நாணயத்தின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வரத்தகர்களும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel