அமீரக செய்திகள்

துபாய்: போக்குவரத்து நேரத்தை 80% குறைக்க 4 குடியிருப்பு பகுதிகளில் புதிய என்ட்ரி, எக்ஸிட் பாய்ண்ட்ஸ்..!! RTA அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நான்கு குடியிருப்பு பகுதிகளுக்கு அணுகலை எளிதாக்கும் வகையில் நுழைவு, வெளியேறும் பகுதிகளை (entry and exit points) அமைக்கும் புதிய மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டமானது ஷேக் முகமது பின் சையத் சாலை, எமிரேட்ஸ் சாலை, ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் மற்றும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் அமைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள், நாத் ஹெஸ்ஸா, அல் அவிர் 1, அல் பர்ஷா சவுத் மற்றும் வாடி அல் சஃபா 3 ஆகியவற்றிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் வசதியான அணுகலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவடைந்ததும், இந்த அணுகல் புள்ளிகள் போக்குவரத்து திறனை 50-80 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக RTA கூறியுள்ளது.

400,000 குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும்

இது தொடர்பாக RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் (RTA) இயக்குநர் ஜெனரல், மட்டர் அல் தயர் பேசுகையில், இந்தத் திட்டம், குடியிருப்புப் பகுதிகளில் சாலை நெட்வொர்க்குகள், விளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான RTA இன் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதுடன் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு இடமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, புதிய நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளுடன், இந்தத் திட்டம் மூலம் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்றும்,  இந்தச் சமூகங்கள் முழுவதும் குடியிருப்போர் மற்றும் சுற்றுலாவாசிகளின் நடமாட்டத்தை மேம்படுத்துவதற்கான விரிவான சாலைப்பணிகள் மற்றும் போக்குவரத்து தீர்வுகளும் இதில் அடங்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

நாத் ஹெஸ்ஸா

அல் டேயர் கூற்றுப்படி, இந்த திட்டத்தில் ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 6,000 வாகனங்கள் இடமளிக்கும் திறன் கொண்ட இரண்டு பாதைகளுடன் நாட் ஹெஸ்ஸாக்கான கூடுதல் நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் அடங்கும்.

இந்த மேம்பாடு நாட் ஹெஸ்ஸா, வார்சன் 4, ஹெஸ்ஸா கார்டன்ஸ் மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் ஆகியவற்றிற்கு சேவை செய்யும், இந்த பகுதிகளில் மொத்தம் 300,000 க்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது.

naad

இந்த திட்டம் ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு இணையான சர்வீஸ் சாலையுடன் இன்டர்செக்சனில் இருந்து ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் இன்டர்செக்சன் வரை நீண்டுள்ளது.

RTAவின் அறிவிப்பின் படி, நாட் ஹெஸ்ஸா மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் காம்ப்ளக்ஸ் ஆகிய இரண்டிற்கும் அணுகலுக்கான ரவுண்டானாவுடன், நாட் ஹெஸ்ஸாவுடன் ஒவ்வொரு திசையிலும் இருவழிச் சாலை அமைப்பது இதில் அடங்கும். ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் தெருவுடன் சிக்னல் செய்யப்பட்ட சந்திப்பும் செயல்படுத்தப்படும், இது பயண நேரத்தை 138 வினாடிகளில் இருந்து 37 வினாடிகளாக அதாவது 80 சதவீதம் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அல் அவிர் 1

அல் அவிர் 1 இலிருந்து எமிரேட்ஸ் சாலையை இணைக்கும் 7.5 கிமீ சாலையை நிர்மாணிப்பதன் மூலம் 50,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் இந்த சமூகத்திற்கு நேரடி அணுகல் வழியை உருவாக்குவது இந்தத் திட்டமாகும். புதிய நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் ஒரு மணி நேரத்திற்கு 1,500 இலிருந்து 3,000 வாகனங்கள் வரை அனுமதித்து சாலையின் திறனை இரட்டிப்பாக்கும்.

அல் பர்ஷா சவுத்

அல் பர்ஷா சவுத் வளர்ச்சிப் பணிகள், தற்போது  நடந்து வரும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் சுமார் 75,000 குடியிருப்பாளர்கள் பயனடைகின்றனர். இந்தத் திட்டத்தில் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் மற்றும் அல் பர்ஷா சவுத் சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்கில் மாற்றங்கள் உள்ளன, ஹெஸ்ஸா தெருவில் இருந்து அல் பர்ஷா சவுத் வரை அணுகலை மேம்படுத்த கூடுதலாக மூன்றாவது இடது-திருப்பு பாதை சேர்க்கப்படுகிறது.

மேலும், ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் சந்திப்பில்  1,114 மீட்டர் நீளத்திற்கு இரண்டு பாதைகளால் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கம் ஒவ்வொரு திசையிலும் உள்ள பாதைகளின் மொத்த எண்ணிக்கையை நான்காக கொண்டு வருவதுடன், ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து அல் கைல் சாலையை நோக்கி போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குகிறது. அத்துடன் அல் பர்ஷா சவுத்-க்கான அணுகலை மேம்படுத்துகிறது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 6,000 முதல் 9,000 வாகனங்கள் வரை போக்குவரத்து திறனை அதிகரிப்பதுடன் சிக்னலில் காத்திருப்பு நேரத்தை நான்கு நிமிடங்களிலிருந்து ஒரு நிமிடமாக குறைக்கிறது.

sf

வாடி அல் சஃபா 3

அதேசமயம், வாடி அல் சஃபா 3 இல், துபாய்-அல் அய்ன் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து நேரடி அணுகலையும் இந்த திட்டம் அறிமுகப்படுத்துகிறது. இந்த பணிகளில் 4 கிமீ உள் சாலைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க புதிய நுழைவுப் புள்ளிகள் ஆகியவை அடங்கும். இந்த விரிவாக்கம் பயண தூரத்தை 10 கிமீ குறைக்கும் மற்றும் பயண நேரத்தை 10 நிமிடங்களில் இருந்து இரண்டாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.

அல் வர்கா

RTA தற்போது அல் வர்காவிற்கு நுழைவு மற்றும் வெளியேறும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது, இது ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து நேரடியாக அணுகலை வழங்குகிறது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் உள் சாலை வலையமைப்பை 8 கிமீ விரிவாக்கம் செய்வது இந்தத் திட்டத்தில் அடங்கும்.

இது முடிந்ததும், ஒரு மணி நேரத்திற்கு 5,000 வாகனங்கள் வரை போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும், பயண நேரத்தை 80 சதவீதம் குறிப்பாக 20 நிமிடங்களில் இருந்து வெறும் 3.5 நிமிடங்களுக்கு குறைக்கும் மற்றும்  பயண தூரம் 5.7 கிமீ இலிருந்து 1.5 கிமீ வரை குறைக்கப்படும். இத்திட்டத்தை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து அல் வர்காவிற்கு புதிய நுழைவு மற்றும் வெளியேறுதல், அல் வர்கா 1 தெருவை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பிரத்யேக விவரக்குறிப்புகளுடன் இருக்கும் ரவுண்டானாக்களை சிக்னல்-கட்டுப்படுத்தப்பட்ட சந்திப்புகளாக மேம்படுத்துவதன் மூலம் 350,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த மேம்பாடுகள் அல் வர்கா 1 தெருவின் திறனை 30 சதவீதம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

RTA ஆனது அல் வர்கா 3 மற்றும் அல் வர்கா 4 ஆகிய இடங்களில் உள்ளக சாலைகளை உருவாக்கி வருகிறது, மேலும் அருகிலுள்ள சைக்கிள் ஓட்டும் பாதைகளுடன் இணைக்க 16 கிமீ சைக்கிள் பாதையை விரைவில் அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!