அமீரக செய்திகள்

போக்குவரத்து எச்சரிக்கை: துபாய் ரைடினால் நாளை குறிப்பிட்ட சாலைகள் மூடல்.. RTA அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நாளை (நவம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் துபாய் ரைடுக்காக சில சாலைகள் குறிப்பிட்ட நேரங்களில் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ஃபைனான்சியல் சென்டர் ரவுண்டானாவுக்கும் இரண்டாவது பாலத்துக்கும் இடையே ஷேக் சயீத் சாலையின் ஒரு பகுதியும், ஷேக் சயீத் சாலைக்கும் அல் கைல் சாலைக்கும் இடையிலான லோயர் ஃபைனான்சியல் சென்டர் சாலையும், ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டில் இருந்து ஒரு வழியும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும் என்று RTA தெரிவித்துள்ளது.

இதனால் அல் முஸ்தக்பால் சாலை, அல் வாசல் சாலை, அல் கைல் சாலை போன்ற மாற்று வழிகளில் பயணிக்குமாறு வாகன ஓட்டிகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் நீட்டிக்கப்பட்ட துபாய் மெட்ரோ நேரங்களையும் RTA அறிவித்துள்ளது. அரபு பிராந்தியத்தின் மிகப்பெரிய சமூக சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வான துபாய் ரைடின் ஐந்தாவது பதிப்பை முன்னிட்டு துபாய் ரைடில் கலந்துகொள்ளும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோவின் நேரத்தை RTA நீட்டித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்வானது வயது அல்லது திறனைப் பொருட்படுத்தாமல் சைக்களில் துபாயை சுற்றும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்குகிறது. இந்த துபாய் ரைடு நிகழ்வு நடைபெறவிருக்கும் பாதைகள் அதிகாலை 5 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படும், பின்னர் சைக்கிள் ஓட்டும் நிகழ்வானது காலை 6.15 மணிக்கு தொடங்கி காலை 8 மணிக்கு முடிவடையும்.

இதனால் நாளை மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என கூறப்பட்டுள்ளது. DFC அமைப்பாளர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில், கடந்த ஆண்டு 35,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தற்போதைய ஐந்தாவது பதிப்பு இன்னும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

Related Articles

Back to top button
error: Content is protected !!