துபாய்: பயணிகளின் வசதிக்காக 141 புதிய ‘குளிரூட்டப்பட்ட பேருந்து நிழற்குடை’-களை திறந்த RTA.. புதிய அம்சங்கள் என்ன..??
பொது போக்குவரத்தில் பல்வேறு திட்டங்களை சமீப காலமாக முன்னெடுத்து வரும் துபாயில் பேருந்து பயணிகளின் வசதிக்காக நகரில் உள்ள முக்கிய இடங்களில் 141 பேருந்து நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இதன் மூலம் பேருந்து பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.
இந்த பேருந்து நிழற்குடைகள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நகரம் முழுவதும் 762 தங்குமிடங்களை வழங்குவதற்கான ஆணையத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக வந்துள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இந்த நிழற்குடைகள் பல பேருந்து வழித்தடங்களை வழங்குவதாகவும், ஒரு சில இடங்கள் 10 வழித்தடங்களுக்கு மேல் இடமளிப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 40 சதவீதம் நிறைவடைந்துள்ள திட்டத்தில், நவீன அழகியல் மற்றும் பயனர் நட்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட தங்குமிடங்கள் அடங்கும். புதிய வடிவமைப்பில் உள்ள நிழற்குடைகளானது, சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான நியமிக்கப்பட்ட இடங்கள் உட்பட, மாற்றுத்திறனாளிகளுக்கான துபாயின் அர்பபணிப்பையும் கருத்தில் கொள்கிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதேவைகளைப் பூர்த்தி செய்தல்
RTAவின் கூற்றுப்படி, இந்த புதிய தங்குமிடங்களுக்கான இடங்கள் அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் முக்கிய பகுதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் முடிந்ததும், இந்த தங்குமிடங்கள் ஆண்டுதோறும் 182 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், பேருந்துப் பயனாளர்களுக்குக் கிடைக்கும் தங்குமிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போதுள்ள உள்கட்டமைப்பு உள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
குளிரூட்டப்பட்ட தங்குமிடங்களுக்கு கூடுதலாக, நிழலிடப்பட்ட வெளிப்புற பகுதிகள், விளம்பர இடங்கள் மற்றும் பேருந்து நெட்வொர்க் வரைபடங்கள், அட்டவணைகள், செல்லும் நேரங்கள் மற்றும் ரைடர்களுக்கான பிற அத்தியாவசிய தகவல் மற்றும் சேவைகளைக் காண்பிக்கக்கூடிய தகவல் திரைகள் ஆகியவை நிறுவப்படும் என்பதையும் RTA வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பயணிகளின் தினசரி பயன்பாட்டின் அடிப்படையில் பேருந்து நிழற்குடைகள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, தினசரி 750க்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட இடங்களுக்கான முதன்மை தங்குமிடங்கள், 250 முதல் 750 தினசரி பயனர்களுக்கான இரண்டாம் நிலை தங்குமிடங்கள், 100 முதல் 250 தினசரி பயனர்களுக்கான அடிப்படை தங்குமிடங்கள் மற்றும் டிராப்-ஆஃப்/பிக்-அப் தினசரி 100க்கும் குறைவான பயனர்களுக்கான தங்குமிடங்கள் ஆகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel