துபாயில் கட்டுக்கடங்காத டிராஃபிக்..!! 2027ஐ இலக்கு வைத்து 16 பில்லியன் திர்ஹம்ஸ் ஒதுக்கீடு..!!
துபாயில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயண நேரத்தைக் குறைத்து போக்குவரத்தை எளிதாக்கவும் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், துபாயில் பகல் நேரங்களில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனை எட்டியுள்ளதாக RTA வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எமிரேட் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவிகிதம் அதிகரிபைப் பதிவு செய்துள்ளது, இது உலகளாவிய சராசரியான 2-4 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் அதிவேக அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
எமிரேட்டின் போக்குவரத்து அளவு கணிசமாக அதிகரித்த போதிலும், உலகளாவிய பயண நேரக் குறியீட்டில் துபாய் உயர்ந்த இடத்தில் உள்ளது என்று RTA தெரிவித்துள்ளது. அதாவது, 2023 டாம்டாம் உலகளாவிய போக்குவரத்துக் குறியீட்டின்படி (2023 TomTom Global Traffic Index), சிங்கப்பூரில் 16 நிமிடங்கள் 50 வினாடிகள், மாண்ட்ரீலில் 19, சிட்னியில் 21, பெர்லினில் 22 என ஒப்பிடும்போது, மத்திய வணிக மாவட்டத்திற்குள் 10 கிமீ பயணத்திற்கு துபாய் 12 நிமிடங்கள் 50 வினாடிகள் பயண நேரத்தை எட்டியுள்ளதாக ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நகர்ப்புற இயக்கம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான RTA இன் முன்முயற்சிகளை மதிப்பாய்வு செய்தபோது இது வந்தது. இதில் 16 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 2024-27 பிரதான சாலைகள் மேம்பாட்டுத் திட்டமும் அடங்கும் என்று கூறப்படுகின்றது. இது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடையும் 22 திட்டங்களைச் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇதுபோல, துபாயில் போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய சாலை திட்டங்களை RTA வெளிப்படுத்தியுள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:
லதீபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்
2025ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தில், அல் கைல் சாலையிலிருந்து எமிரேட்ஸ் சாலை வரையிலான 12 கி.மீ.க்கு மேல் 8 கி.மீ.க்கும் அதிகமான பாலங்களின் கட்டுமானம் அடங்கும். ஏறத்தாழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் இந்தத் திட்டம், இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 16,000 வாகனங்கள் செல்லும் திறனைச் சேர்ப்பதுடன் பயண நேரத்தை 15-20 சதவிகிதம் குறைக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் பயனடையும் மேதான் சாலை மேம்பாட்டுத் திட்டமும் அடங்கும். இது இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 22,000 வாகனங்கள் செல்லும் திறனைச் சேர்க்கும் மற்றும் உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் இருந்து மேதான் ஸ்ட்ரீட் வரையிலான பயண நேரத்தை வெறும் நான்கு நிமிடங்களாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக RTA கூறியுள்ளது.
அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்
அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கு 9,000 முதல் 12,000 வாகனங்கள் வரை சாலை திறனை அதிகரிக்கும் 6.2 கிலோமீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவை அடங்கும். இது பயண நேரத்தை எட்டு நிமிடங்களிலிருந்து மூன்றாகக் குறைக்கும், மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயனடைவார்கள் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில், அனைத்து திசைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மொத்தம் 5 கிமீ நீளமுள்ள ஐந்து பாலங்களை நிர்மாணிப்பதை உள்ளடக்கிய டிரேட் சென்டர் ரவுண்டானா மேம்பாட்டு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை RTA வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், 12 நிமிடங்களில் இருந்து வெறும் 90 வினாடிகளுக்கு பயண நேரத்தை குறைக்கவும், ரவுண்டானா போக்குவரத்து சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படும் மேற்பரப்பு-நிலை சந்திப்பாக (surface level intersection) மாற்றப்படும்.
உம் சுகீம் மற்றும் அல் குத்ரா ஸ்ட்ரீட்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் ஜுமைரா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து எமிரேட்ஸ் சாலை வரையிலான 16 கி.மீ உள்ளடக்கியது. இந்தத் திட்டமானது நான்கு சந்திப்புகளை மேம்படுத்துவதை உள்ளடக்கியது, இது ஒரு மணி நேரத்திற்கு 8,400 முதல் 12,600 வாகனங்கள் வரை சாலை திறனை அதிகரிக்கும் மற்றும் பயண நேரத்தை 46 நிமிடங்களில் இருந்து 11 ஆக குறைக்கும் என்று கூறப்படுகிறது.
அல் ஃபே மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட்கள்
அல் ஃபே ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம், அல் கைல் ரோட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலையை சந்திக்கும் இடத்தில் இருந்து ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் வழியாக எமிரேட்ஸ் சாலை வரை செல்கிறது. இது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 64,400 வாகனங்களுக்கு கூடுதல் திறனை வழங்கும், சுமார் 600,000 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்.
அல் சஃபா ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம் ஷேக் சையத் சாலையிலிருந்து அல் வாஸ்ல் சாலை வரை நீண்டுள்ளது. இந்தத் திட்டம் பயண நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து இரண்டாகக் குறைக்கும், சுமார் 358,000 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று RTA கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel