ADVERTISEMENT

பொதுத்துறை ஊழியர்களுக்கு தேசிய தின விடுமுறையை அறிவித்த அமீரகம்..!!

Published: 22 Nov 2024, 1:05 PM |
Updated: 22 Nov 2024, 1:07 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டின் கடைசி பொது விடுமுறையான தேசிய தினத்தை முன்னிட்டு, பொதுத்துறை ஊழியர்களுக்கு அமீரக அரசு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, அமீரகத்தில் உள்ள அரசாங்க ஊழியர்கள் இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமீரக தேசிய தினமான டிசம்பர் 2, திங்கள்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 3, செவ்வாய்கிழமை ஆகிய தேதிகளில் பொதுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களில் வழக்கமான வேலை நேரம் டிசம்பர் 4, புதன்கிழமை மீண்டும் தொடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் நவம்பர் 30, சனிக்கிழமை முதல் டிசம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் நீண்ட விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் ஒன்றாக ஒன்றிணைந்ததைக் கொண்டாடும், வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு அமீரகம் தனது 53 வது தேசிய தினத்தை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் ‘ஈத் அல் எதிஹாத்’ என்று அழைக்கப்படும் தேசிய தின கொண்டாட்டங்கள், அமீரகத்தின் அனைத்து எமிரேட்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீ்கத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel