ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து பயணிகள் நெய், ஊறுகாய் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு என்ன..?? எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது..??

Published: 24 Nov 2024, 2:34 PM |
Updated: 24 Nov 2024, 2:41 PM |
Posted By: Menaka

இந்தியாவில் இருந்து பயணம் செய்பவர்கள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அறிந்திராமல் தங்கள் லக்கேஜில் அவற்றை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு சரிபார்க்கப்பட்ட லக்கேஜ்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது பயணிகளுக்கு தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்கலாம்.

ADVERTISEMENT

நீங்கள் எங்கு பயணம் செய்தாலும், விமான நிலையங்கள், சுங்கம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில பொருட்களை செக்-இன் பேக்கேஜ்களில் அனுமதிக்கப்பட்டாலும், கேரி-ஆன் லக்கேஜில் (hand luggage) அவை அனுமதிக்கப்படாமல் போகலாம்.

எனவே, எந்தப் பொருட்களைப் பயணிகள் எடுத்துச் செல்லலாம் அல்லது எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான விவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

உலர்ந்த தேங்காய்:

இந்தியாவில் ‘khopra’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் உலர் தேங்காயானது, மார்ச் 2022ம் ஆண்டில் இந்திய சிவில் ஏவியேஷனின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பால் (Bureau of Civil Aviation Security -BCAS) தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

DRY COCONUT

ADVERTISEMENT

BCAS பட்டியலின்படி, உலர் தேங்காய் (கோப்ரா) எடுத்துச் செல்ல அல்லது செக்-இன் லக்கேஜ்களில் அனுமதிக்கப்படாது.

இ-சிகரெட்டுகள்:

BCAS வெளியிட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலின்படி, செக்-இன் அல்லது கையில் எடுத்துச் செல்லும் ஹேண்ட் லக்கேஜ்களில் இ-சிகரெட்டுகள் அனுமதிக்கப்படாது.

மசாலாப் பொருட்கள்:

நீங்கள் விமானங்களில் எடுத்துச் செல்லும் ஹேண்ட் லக்கேஜ்களில் முழு மசாலாவாகவோ அல்லது தூள் வடிவிலோ மசாலாப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், BCAS வழிகாட்டுதல்களின்படி, செக்டு-இன் லக்கேஜ்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன.

SPICES

நெய்:

நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் ஹேண்ட்  லக்கேஜில், நெய் அல்லது வெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு வரும்போது, ​​அவை திரவம், ஏரோசோல்கள் மற்றும் ஜெல் (LAGs) ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகளின் கீழ் வருகிறது. எனவே, நெய் போன்ற பொருட்களை 100 மில்லி என்ற அளவில் கொண்டு வர மட்டுமே அனுமதி உண்டு. இருப்பினும், செக்-இன் லக்கேஜ்களை பொறுத்தவரை, ஒரு பயணி 5 கிலோ வரை நெய்யை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.

GHEE

அதேசமயம், சில விமான நிலையங்கள் நெய்யை எடுத்துச் செல்ல உங்களை அனுமதிக்காது என்பதால், நீங்கள் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தால் வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

விமான நிலையத்தில் குறிப்பிட்ட பொருள் அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தேடுவதன் மூலமாகவோ அல்லது விமான நிலையத்தை நேரடியாக அழைப்பது மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.

ஊறுகாய்:

BCAS பட்டியலின் படி, பயணிகள் எடுத்துச் செல்லும் ஹேண்ட் லக்கேஜ் மற்றும் செக்-இன் லக்கேஜ் இரண்டிலும் மிளகாய் ஊறுகாயைத் தவிர, மற்ற ஊறுகாயை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இது கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Mango pickle

UAE விமானங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்:

அனைத்து சர்வதேச பயணங்களிலும் உள்ளது போல், நீங்கள் இறங்கும் நகரம் அல்லது நாட்டின் சுங்க வழிகாட்டுதல்களைச் சரிபார்ப்பதன் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel