அமீரகத்தில் எங்கும், எந்த நேரத்திலும் மருத்துவ சேவைகளை அணுக ‘மொபைல் ஹெல்த் ஸ்டேஷன்’.. விரைவில் வரவுள்ள புதிய தொழில்நுட்பம்..!!
ஐக்கிய அரபு அமீரகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு துறைகளையும் மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் தற்பொழுது அமீரக மக்கள் எங்கும் மற்றும் எந்த நேரத்திலும் மருத்துவ சேவைகளை அணுகும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
Mad Wolf என்ற மெடிக்கல் டிரேடிங் நிறுவனம் ஆல்-இன்-ஒன் ஹெல்த் ஸ்டேஷனை வடிவமைத்துள்ளது. துபாயில் அக்டோபர் 29 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட ‘Healthcare Future Summit’ என்ற மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், யார் வேண்டுமானாலும் எங்கும், எந்த நேரத்திலும் மருத்துவ சேவையை எளிதாக அணுக அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவார்ந்த சோதனைக் கருவிகள், நிகழ்நேர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் ஸ்மார்ட் டிஸ்பென்சிங் மருந்தகம் ஆகியவற்றுடன், இந்த மொபைல் ஸ்டேஷன் மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்கும் எளிதாக சுகாதார அணுகலை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையத்தை பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் அல்லது மொபைல் டிரக்கில் கூட நிறுவலாம் என்றும், இதை எந்த இடத்திலும் வைக்கலாம் என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் ஸ்டேஷன் எப்படி வேலை செய்கிறது?
ஒரு நோயாளி ஒரு குறியீட்டை உள்ளிடுவதன் மூலமோ அல்லது ஆவணத்தை ஸ்கேன் செய்வதன் மூலமோ சுகாதார நிலையத்திற்குள் நுழைய முடியும். உள்ளே நுழைந்ததும், ஒரு சாதனம் அவரின் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு மற்றும் ஈசிஜி உள்ளிட்ட பலவற்றையும் அளவிடும். அவை அனைத்தும் அளவிடப்பட்டவுடன், பரிசோதனை முடிவுகள் தொலைதூர மருத்துவருக்கு அனுப்பப்படும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதன் பிறகு, நோயாளி வீடியோ அழைப்பு மூலம் மருத்துவருடன் தொடர்பு கொள்ள முடியும் மற்றும் மருந்தை பரிந்துரைக்கும் முன் மருத்துவர் நோயைக் கண்டறிய முடியும். ஆலோசனை முடிந்ததும், நோயாளி கிளினிக்கை விட்டு வெளியேறி, QR குறியீட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட் டிஸ்பென்சிங் மருந்தகம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், இந்த நிலையத்தின் ஒவ்வொரு யூனிட்டும் தனித்தனியாக விற்கப்படலாம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கூடவே, பார்வை, எலும்பு அடர்த்தி மற்றும் தமனி தடிப்புத் தோல் அழற்சி உள்ளிட்ட கூடுதல் உள்ளீடுகளை அளவிடவும் இந்த நிலையத்தை திட்டமிடலாம் என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இது தவிர, நிலையத்தின் மென்பொருளை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு அல்லது மருத்துவ வசதியில் இருக்கும் வேறு ஏதேனும் அமைப்புடன் மாற்றியமைக்கக் கட்டமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த இயந்திரம் முழுமையாக சோதிக்கப்பட்டிருப்பதாகவும், இப்போது வெளியிட தயாராக உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், “இந்த நவீன மருத்துவ இயந்திரம் குறித்து எங்களுக்கு நிறைய விசாரணைகள் உள்ளன, அதற்கு அதிக தேவை இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel