அமீரகத்தில் லாட்டரி செயல்பாடுகளை தொடங்கும் ‘தி கேம் LLC’..!! 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு அறிவிப்பு…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம், அபுதாபியைத் தளமாகக் கொண்ட தி கேம் எல்எல்சி (The Game LLC) என்ற நிறுவனத்திற்கு முதல் முறையாக லாட்டரியை இயக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமத்தை அமீரக அரசின் கேமிங் ஆணையம் (GCGRA) வழங்கியது.
இதையடுத்து, அமீரகத்திற்குள் ‘UAE லாட்டரி’ என்ற பெயரில் செயல்படும் இந்நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி செயல்பாடு இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. ஆம், 100 மில்லியன் திர்ஹம்ஸை கிராண்ட் பரிசாக அறிவித்துள்ள ‘லக்கி டே’ டிராவின் தொடக்க நேரலை எதிர்வரும் டிசம்பர் 14ம் தேதி அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த UAE லாட்டரி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக பரபரப்பான கேம்களை அறிமுகப்படுத்துகிறது. மேலும், கேம் நடைபெறும் போது அமீரக நாட்டில் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்புபவர்கள் UAE லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான theuaelottery.ae இல் இப்போது டிக்கெட்டுகளை வாங்கலாம். ‘லக்கி டே’ விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் 100 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசைத் தவிர, ஏழு லக்கி நபர்கள் 100,000 திர்ஹம்ஸ் வெல்வதற்கு உத்தரவாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதன்படி, பங்கேற்பாளர்கள் பொருத்தும் எண்களைப் பொறுத்து, 100 மில்லியன் திர்ஹம்ஸ், 1 மில்லியன் திர்ஹம்ஸ், 100,000 திர்ஹம்ஸ், 1,000 திர்ஹம்ஸ் மற்றும் 100 திர்ஹம்ஸ் ஆகியவற்றை வெல்லலாம். ஒவ்வொரு நுழைவுக்கும் 50 திர்ஹம்ஸ் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த லாட்டரி எண்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது சீரற்ற எண்களை தேர்ந்தெடுக்க ‘ஈஸி பிக்’ அம்சத்தையும் பயன்படுத்தலாம்.
அதுமட்டுமில்லாமல், 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்வதற்கான வாய்ப்பிற்காக ஸ்கிராட்ச் கார்டுகளை வாங்குவதற்கான விருப்பமும் இதில் உள்ளது. இந்த கார்டுகளுக்கான விலைகள் 5 திர்ஹம்ஸ் முதல் தொடங்குகின்றன, இது 50,000 திர்ஹம்ஸ் வரை வெல்லும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
அதேபோல், டிராவின் 10 திர்ஹம்ஸ் கார்டுகளுக்கு 100,000 திர்ஹம்ஸ் உயர் பரிசு, 20 திர்ஹம்ஸ்க்கு 300,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு, 50 திர்ஹம் மதிப்பிலான கார்டுகள் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் என பங்கேற்பாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். குறிப்பாக, பரிசுகளுக்கு தற்போது எந்த வரியும் விதிக்கப்படவில்லை.
பங்கேற்பது எப்படி?
இந்த டிராவில் பங்கேற்க விரும்புபவர்கள், முதலில் ஆன்லைனில் அவர்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும். கேம்கள் தற்போது ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் இந்த விருப்பத்தை UAE Lottery அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒழுங்குமுறை அமைப்பு GCGRA நிறுவப்படுவதற்கு முன்பு, பல கேமிங் மற்றும் லாட்டரி நிறுவனங்கள் இயங்கின. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாடுகளை நிறுத்தி, UAE லாட்டரி உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இந்த உரிமம் தி கேம் LLC நிறுவனத்திற்கு கடந்த ஜூலை 2024 இல் வழங்கப்பட்டது.
இது குறித்து தி கேமில் லாட்டரி நடவடிக்கைகளின் இயக்குனர் பிஷப் வூஸ்லி பேசிய போது, “பொறுப்பான விளையாட்டை ஊக்குவிக்கும் போது உற்சாகமான அனுபவங்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அனைத்து செயல்பாடுகளும் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் எங்கள் குழு உறுதியாக உள்ளது, டிரா செயல்முறையிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது வரை நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்திலையில், GCGRA இன் அனுமதியின்றி அமீரகத்தில் வணிக கேமிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது நடத்துவது சட்டவிரோதமானது மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும், GCGRA கட்டமைப்பின் படி, உரிமம் பெறாத ஆபரேட்டர்கள் மூலம் வாடிக்கையாளராக விளையாடுவதும் சட்டவிரோதமானது என்றும் ஒழுங்குமுறை அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். Link: Khaleej Tamil Whatsapp Channel