UAE லாட்டரி: 5 திர்ஹம்ஸ் முதல் டிக்கெட்.. பங்கேற்பது எப்படி? ஸ்க்ராட்ச் கார்டுகள் என்றால் என்ன? முழுவிபரம் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம், அபுதாபியைத் தளமாகக் கொண்ட தி கேம் எல்எல்சி (The Game LLC) என்ற நிறுவனத்திற்கு முதல் முறையாக லாட்டரியை இயக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமத்தை அமீரக அரசின் கேமிங் ஆணையம் (GCGRA) வழங்கியது.
இந்நிலையில், கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, அமீரகத்திற்குள் ‘UAE லாட்டரி’ என்ற பெயரில் செயல்படும் இந்நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி செயல்பாடு இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
டிராவில் பங்கேற்க விரும்புபவர்கள், UAE லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.theuaelottery.ae இல் டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்த முயற்சியானது, அமீரகத்தில் முதல் மற்றும் ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி நடவடிக்கையாகும்.
குறிப்பாக, 50 திர்ஹம் விலையிலான டிக்கெட்டுகளுடன், 100 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்டை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று UAE லாட்டரி நிர்வாகம் அறிவித்துள்ளது. UAE லாட்டரியில் பங்கேற்பது எப்படி, டிக்கெட் விலை மற்றும் ரொக்கப் பரிசுகள் போன்ற முழுவிபரங்களும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeபங்கேற்பாளர்கள் எத்தனை கேம்களை விளையாடலாம்?
தற்போது, லாட்டரியில் ‘லக்கி டே’ மற்றும் ‘ஸ்க்ராட்ச் கார்டு’ என்ற இரண்டு கேம்கள் உள்ளன. மேலும் பல்வேறு கேம்கள் விரைவில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லக்கி டே’ கேம் விளையாடுவது எப்படி?
‘லக்கி டே’க்கான ஒவ்வொரு நுழைவுக்கும் 50 திர்ஹம் செலவாகும். பங்கேற்பாளர்கள் ‘Days’ எனும் பிரிவில் இருந்து ஆறு எண்களையும், ‘Months’ எனும் பிரிவிலிருந்து ஒரு எண்ணையும் தேர்வு செய்வார்கள். டிரா முடிவில் ஏழு எண்களையும் பொருத்தினால் அவர்கள் ஜாக்பாட் அடிப்பார்கள்.
அதுவே ‘Days’ பிரிவில் உள்ள ஆறு எண்களையும் பொருத்தக்கூடியவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைக்கும். அதேபோல், ‘Days’ பிரிவில் இருந்து ஐந்து எண்களும், ‘Months’ பிரிவில் இருந்து ஒரு எண்ணும் பொருந்தினால் மூன்றாம் பரிசும், ‘Days’ பிரிவிலிருந்து ஐந்து எண்கள் அல்லது ‘Days’ இலிருந்து நான்கு மற்றும் ‘Months’ இலிருந்து ஒன்று பொருந்தினால் அவர்கள் நான்காவது பரிசும் வெல்வார்கள்.
மேலும், ‘Days’ பிரிவில் இருந்து மூன்று எண்களும், ‘Months’ என்பதிலிருந்து ஒன்றும் இருந்தால்; அல்லது ‘Days’ ல் இரண்டு மற்றும் ‘Months’ ல் ஒரு எண்; அல்லது ‘Days’ ல் இருந்து ஒன்று மற்றும் ‘Months’ ல் இருந்து ஒரு எண்; அல்லது ‘Months’ பிரிவில் இருந்து ஒன்று என பொருத்துபவர்கள் ஐந்தாவது பரிசைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை என்ன?
- ஜாக்பாட்: 100 மில்லியன் திர்ஹம்ஸ்
- 2வது பரிசு: 1 மில்லியன் திர்ஹம்ஸ்
- 3வது பரிசு: 100,000 திர்ஹம்ஸ்
- 4வது பரிசு: 1,000 திர்ஹம்ஸ்
- 5வது பரிசு: 100 திர்ஹம்ஸ்
‘லக்கி சான்ஸ்’ என்றால் என்ன?
வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும், கணினி அதற்குரிய ‘லக்கி சான்ஸ் ஐடி’யை உருவாக்குகிறது. லக்கி டே கேமின் ஒவ்வொரு நேரடி டிராவின் போதும், மற்றொன்று ‘லக்கி சான்ஸ்’ நடக்கும். டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் தொடக்க டிராவிற்கு, ஏழு ‘லக்கி சான்ஸ் ஐடிகளும்’ ஒவ்வொன்றுக்கும் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட ஜாக்பாட் வெற்றியாளர்கள் இருந்தால் என்ன நடக்கும்?
வெற்றிபெறும் டிக்கெட் வைத்திருப்பவர்களிடையே தொகை சமமாகப் பிரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்.
எப்போது டிரா நடைபெறும்?
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 8.30 மணிக்கு நேரடி டிரா நடைபெறும்.
பங்கேற்பாளர்கள் எப்போது டிக்கெட்டுகளை வாங்கலாம்?
டிரா தேதியில் இரவு 10 மணி முதல் அடுத்த டிரா தேதியான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு முன்பாக வரை இதற்கான டிக்கெட்டுகளைப் பெறலாம். நேரடி டிராவின் போது, லக்கி டே டிக்கெட்டுகளின் விற்பனை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
ஒரு நுழைவு பல வெற்றிகளைப் பெற முடியுமா?
டிரா தொடரில் ஒவ்வொரு நுழைவும் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற தகுதியுடையது. ஒரே நுழைவு மூலம் பல பரிசுகளை வென்றால், மிகப்பெரிய பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கிராட்ச் கார்டுகள் என்றால் என்ன?
பங்கேற்பாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்வதற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை வாங்கலாம். இந்த கார்டுகளுக்கான கட்டணங்கள் 5 திர்ஹம்ஸ்-இல் தொடங்குகின்றன, இது 50,000 திர்ஹம்ஸ் வரை வெல்லும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
அதேபோல், டிராவின் 10 திர்ஹம்ஸ் கார்டுகளுக்கு 100,000 திர்ஹம்ஸ் உயர் பரிசு, 20 திர்ஹம்ஸ்க்கு 300,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு, 50 திர்ஹம் மதிப்பிலான கார்டுகள் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் என பங்கேற்பாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். குறிப்பாக, பரிசுகளுக்கு தற்போது எந்த வரியும் விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். Link: Khaleej Tamil Whatsapp Channel