பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் பாலைவனம்.. சவூதி அரேபியாவில் பெய்த ஆலங்கட்டி மழை..!!
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வந்த நிலையில், வெள்ளை நிற கம்பளத்தால் மூடியது போல மலைப்பகுதிகளில் பனி பரவிப் படர்ந்து கிடக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை முதல், நாட்டின் அல்-ஜவ்ஃப் (Al Jawf) பிராந்தியத்தின் சில பகுதிகளில் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்ததாக சவுதி ப்ரெஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்குப் பிறகு, நேற்று முன்தினம் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு குளிர்காலம் போல் காட்சியளித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்த கனமழைகள் குளிர்காலத்திற்கு புதிய தொடக்கத்தை அளித்து, பின்னர் வசந்த காலத்திற்கு வழி வகுக்கும். வசந்த காலத்தில் லாவெண்டர், கிரிஸான்தமம் (chrysanthemum) மற்றும் ஏராளமான நறுமண தாவரங்கள் போன்ற பருவகால காட்டுப் பூக்களுக்கு பெயர் பெற்ற அல்-ஜாஃப்பின் நிலப்பரப்பு சமீபத்திய மழையினால் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.
இனி வரும் நாட்களில் அல்-ஜவ்ஃப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியாவின் வானிலைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும், புயல்களுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது சாலைகளில் கிடைமட்டத் தெரிவுநிலையை குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மட்டுமின்றி, ஓமானிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட மற்ற வளைகுடா நாடுகளின் சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel