ADVERTISEMENT

துபாயில் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கும் 12 மணி நேர மெகா விற்பனை அறிவிப்பு..!!

Published: 23 Dec 2024, 5:01 PM |
Updated: 23 Dec 2024, 5:01 PM |
Posted By: Menaka

துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தால் (DFRE) நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 30வது பதிப்பை முன்னிட்டு, வருகின்ற டிசம்பர் 26ம் தேதி வியாழக்கிழமை அன்று 12 மணி நேர மெகா விற்பனை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த மெகா விற்பனையின் போது, துபாய் எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து மஜித் அல் ஃபுத்தைம் மால்களிலும் (Majid Al Futtaim) ஷாப்பிங் செய்யும் துபாய் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியான இந்த மெகா விற்பனையில் ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஆடம்பர, சர்வதேச மற்றும் உள்ளூர் பிராண்டுகளுக்கு பிரத்யேக ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷாப்பிங் தள்ளுபடி விற்பனையில் பின்வரும் மால்கள் பங்கேற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவை;

  1. மால் ஆஃப் தி எமிரேட்ஸ்,
  2. சிட்டி சென்டர் மிர்டிஃப்,
  3. சிட்டி சென்டர் தேரா,
  4. சிட்டி சென்டர் மெய்செம் (City Centre Me’aisem),
  5. சிட்டி சென்டர் அல் ஷிந்தகா
  6. மை சிட்டி சென்டர் அல் பர்ஷா.

இந்த நிகழ்வின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மால்களில் ப்ளே & வின் ஆக்டிவேஷன் போன்ற அற்புதமான ப்ரோமோஷன்களையும் காணலாம். குறிப்பாக, 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்பவர்கள், Apple Macbook Air, ஆப்பிள் வாட்ச், சாம்சங் கேலக்ஸி பட்ஸ், Asus நோட்புக் போன்ற அதிக மதிப்புள்ள பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளுக்காக, SHARE செயலி மூலம் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பரந்த DSF விற்பனை சீசன் டிசம்பர் 26, 2024 முதல் பிப்ரவரி 2, 2025 வரை நடைபெறுகிறது, துபாயின் மால்கள் மற்றும் ஷாப்பிங் இடங்களில் 75% வரை தள்ளுபடியை இது வழங்குகிறது. கூடுதலாக, DSF இன் 30வது பதிப்பில், ஒளிக் காட்சிகள், வானவேடிக்கைகள், ட்ரோன் ஷோக்கள் மற்றும் பரிசு வழங்குதல்கள் உட்பட 38 நாட்கள் சிறப்பு கொண்டாட்டங்களும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel