ADVERTISEMENT

அமீரக Visit Visa மற்றும் Job Seekers Visa குறித்து குழப்பமா.? டிராவல் ஏஜென்ட் அளித்த பதில்களின் வீடியோ..!!

Published: 1 Dec 2024, 8:20 PM |
Updated: 1 Dec 2024, 8:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபகாலமாகவே விசா நடைமுறைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அப்டேட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக விசிட் விசா நடைமுறைகளில் கடந்த சில நாட்களாக பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விசிட் விசாவில் வரும் நபர்களுக்கு பெரும் குழப்பத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்தியாவிலிருந்து வேலை தேடி விசிட் விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து வருவதாலும், விசிட் விசாவில் வந்து விசா காலம் முடிந்த பின்பும் கூட நாடு திரும்பாமல் ஓவர் ஸ்டேவில் சிலர் இங்கேயே தங்கி விடுவதாலும், விசிட் விசாவில் வருபவர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளையும் அமீரக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

எனவே, வேலை தேடி அல்லது சுற்றிப்பார்க்க இந்தியாவிலிருந்து விசிட் விசாவில் வருபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அமீரகத்திற்கு விசிட் விசாவில் வேலை தேடி வருவது சிறந்ததா? அல்லது வேலை தேடுபவர்களுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள விசாவில் (Job Seekers Visa) வருவது சிறந்ததா? போன்ற பல்வேறு கேள்விகள் நம்மில் பலருக்கும் உள்ளது.

ADVERTISEMENT

இந்த கேள்விகள் குறித்து இந்தியாவிலும், அமீரகத்திலும் டிராவல் நிறுவனம் நடத்தி வரும் திரு SKV.ஷேக் அவர்களிடம் கேட்ட போது, தற்போது நடைமுறையில் உள்ள விசா சம்பந்தப்பட்ட விதிகள், பயணத்திற்கான நிபந்தனைகள் மற்றும் Job Seekers Visa குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் முழு வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.                      Link: Khaleej Tamil Whatsapp Channel