UAE: அல் அய்னில் வரவிருக்கும் 100 புதிய பேருந்து நிறுத்தங்கள்..!! முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்டன் சிட்டி என்று அழைக்கப்படும் அல் அய்னில் புதிதாக 100 பேருந்து நிறுத்தங்கள் வரவுள்ளதாக அந்நகரத்தின் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அல் அய்ன் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிக்கையில், நகரின் பல பகுதிகளில் 100 புதிய பொது போக்குவரத்து பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் திட்டத்தைத் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.
நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், பொதுப் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel