துபாயின் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 30வது பதிப்பானது, குடும்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கண்கவர் கொண்டாட்டங்கள், ரேஃபிள்கள் மற்றும் பல போட்டிகளுடன் இந்த ஆண்டும் திரும்பியுள்ளது. குறிப்பாக, இந்த முறை ரேஃபிள் டிராக்களில் கலந்துகொள்ள பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமீரகத்தைப் பொறுத்தவரை, இப்போது ரேஃபிள் டிரா என்பது பல குடியிருப்பாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகிவிட்டது. ஆம், DSFஇன் போது நடத்தப்படும் ஷாப்-அண்ட்-வின் ரேஃபிள் டிராக்களில் வெறும் 5 திர்ஹம்ஸ் செலவு செய்து அமீரக குடியிருப்பாளர்கள் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
DSF இன் முந்தைய பதிப்புகளில், 200 திர்ஹம்ஸ் வரை கடைகளில் செலவழிப்பவர்கள் மட்டுமே மெகா ரேஃபிள் டிராவில் சேர முடியும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் இப்போது, ’டிரீம் துபாய்’ எனப்படும் ஒரு புதிய தளம், ஷாப்பிங் கார்டுகளை வெறும் 5 திர்ஹம்ஸ் செலவழித்து வாங்குபவர்கள் எவரையும் டிராவில் பங்கேற்க அனுமதிக்கிறது.
இந்த டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு சொகுசு கார், 3 மில்லியன் திர்ஹம் ரொக்கம் மற்றும் 100 கிராம் தங்கம் ஆகிய பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் பலரும் எப்படி மிகப்பெரிய பரிசுகளுக்கான ரேஃபிள் டிக்கெட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இது குறித்து ஷாப்-அன்ட்-வின் DSF டிராவில் முதல் முறையாக பங்கேற்ற ஷார்ஜா குடியிருப்பாளர் ஒருவர் பேசிய போது, “ட்ரீம் துபாயில், நான் பல்வேறு விலைகளில் பல ஷாப்பிங் கார்டுகளை வாங்கினேன், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு கார்டை 5 திர்ஹம்ஸ்க்கு வாங்க முடியும், டிராவில் அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நம்பமுடியாத பரிசுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய தொகையாகும்” என்று கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக நடத்தப்படும் ரேஃபிள்
சில அமீரகக் குடியிருப்பாளர்கள் DSF ரேஃபிள் டிராவில் பங்கேற்பதை ஒரு வருடாந்திர வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் நீண்டகால அமீரகக் குடியிருப்பாளர் ஒருவர் இரண்டு தசாப்தங்களாக DSF ரேஃபிள் டிராவில் பங்கேற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, ஆரம்ப காலத்தில் Enoc பெட்ரோல் நிலையங்களுக்குள் 200 திர்ஹம்ஸ்க்கு விற்கப்படும் DSF ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பார்கள் என்றும், அப்போது இது ஒரு உற்சாகமான மற்றும் போட்டி சூழ்நிலையாக இருந்தது. இப்போது, இது மலிவு விலையில் மிகவும் எளிதாக அணுகக்கூடியதாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அக்டோபர் 7 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் Enoc ரேஃபிள், பலவிதமான பரிசுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சுமார் 70 வெற்றியாளர்கள் இதுவரை தலா 10,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர், அதே நேரத்தில் 30 பங்கேற்பாளர்கள் 100,000 திர்ஹம்ஸ் தொகையைப் பெறுவார்கள், மேலும் நான்கு வெற்றியாளர்கள் 50,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை தட்டிச் செல்வார்கள். கூடுதலாக, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் புத்தம் புதிய சொகுசு காரை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel